அமேசானில் தற்போது ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேஸ் விற்பனை நடந்து வருகிறது. இந்த விற்பனையின் கடைசி நாள் ஏப்ரல் 20, இந்த விற்பனையில், வாடிக்கையாளர்களுக்கு அதிகம் விற்பனையாகும் மொபைல்கள் மற்றும் துணைக்கருவிகளுக்கு 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அத்துடன் இதில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டில் 10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த விற்பனையில் சிறந்த ஒப்பந்தத்தைப் பற்றி பேசுகையில், வாடிக்கையாளர்களுக்கு விற்பனையில் ரெட்மி நோட் 10 ப்ரோமீது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெட்மி நோட் 10 ப்ரோ தற்போது ரூ.17,999க்கு கிடைக்கிறது, மேலும் சிறப்பு என்னவென்றால், சிறந்த சலுகையின் கீழ் ரூ.16,999க்கு இந்த போனை வாங்கலாம். இதில் வங்கி சலுகைகளும் அடங்கும்.


மேலும் படிக்க | அறிமுகமானது Infinix Hot 11 குறைந்த விலையில் சூப்பர் அம்சங்கள்


ரெட்மி நோட் 10 ப்ரோவின் மிக முக்கியமான விஷயம் அதன் 64 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா, 120 ஹெர்ட்ஸ் உயர் புதுப்பிப்பு வீதம் மற்றும் 5020எம்ஏஎச் பேட்டரி ஆகும். அத்துடன் சியோமி ரெட்மி நோட் 10 ப்ரோவின் இந்த போன் 6.67 இன்ச் முழு எச்டி + சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.


இதன் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ்  புதுப்பிப்பு வீதம் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவுடன் வருகிறது. இது இரட்டை நானோ சிம் ஆதரவுடன் வருகிறது. ஸ்னாப்டிராகன் 732ஜி SoC இந்த போனில் செயலியாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் LPDDR4x ரேம் 8 ஜிபி வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 128 ஜிபி UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் போனின் மெமரியை 512 ஜிபி வரை அதிகரிக்கலாம்.


64 மெகாபிக்சல் கேமரா கிடைக்கும்
கேமரா பற்றி பேசுகையில், இந்த போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் சூப்பர் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது.


போனின் முன்பக்கத்தில் செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஆற்றலுக்கு, இந்த ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி உள்ளது, மேலும் இதில் 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.


மேலும் படிக்க | மொபைல் பேட்டரிகள் வெடிப்பதற்கான காரணம் இதுதான் - இந்த தவறை செய்யாதீங்க


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR