வோடபோன் ஐடியா தனது பயனர்களுக்காக இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அதிக டேட்டா நன்மைகளுடன் உருவாக்கியுள்ளது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.218 மற்றும் ரூ.248-க்கு இரண்டு அதிரடி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறித்த திட்டங்கள் அதிவேக இணைய தரவு, வரம்பற்ற அழைப்பு நேரம் மற்றும் ஒரு நாளைக்கு 100 குறுஞ்செய்தி என வாடிக்கையாளர்களை அசரவைக்கிறது. இந்த திட்டங்களுக்கான செல்லுபடியாகும் 28 நாட்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


என்றபோதிலும் இந்த திட்டங்கள் தற்போது டெல்லி மற்றும் ஹரியானா வட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன. விரைவில் நாடு முழுவதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து தெரிவிக்கையில்., ரூ.218 ப்ரீபெய்ட் திட்டம் அதன் பயனர்களுக்கு 6GB அதிவேக இணைய தரவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு நேரம், நாள் ஒன்றுக்கு 100 SMS பெறுவார்கள். மேலும், ஒரு பாராட்டு சேவையாக, வோடபோன் அதன் பயனர்களுக்கு வோடபோன் ப்ளே மற்றும் ZEE5 இலவச சந்தாவை வழங்குகிறது. இந்த சேவைகளின் விலை முறையே ரூ.499 மற்றும் ரூ.999 ஆகும்.


இருப்பினும், டெலிகாம் டாக் அறிக்கைகள், இந்த சேவைகளுக்கான உள்ளடக்கத்தை வோடபோன் ப்ளே பயன்பாட்டிலிருந்து நேரடியாகப் பெறலாம் மற்றும் தனித்தனியாக அல்ல என அறிவித்துள்ளது.


ரூ.248 ப்ரீபெய்ட் திட்டம் அதன் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புடன் 8GB அதிவேக இணைய தரவை வழங்கும். இந்த திட்டத்தில், பயனர்கள் 100 SMS, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் வோடபோன் ப்ளே மற்றும் ZEE5 ஆகியவற்றில் உள்ளடக்கத்திற்கான அணுகலைப் பெறுவார்கள். இருப்பினும், இந்த சேவைகளின் உள்ளடக்கத்தை வோடபோன் ப்ளே பயன்பாட்டின் மூலம் மட்டுமே அணுக முடியும் எனவும் அறிவித்துள்ளது.


248


Talktime

Unlimited Calls


Data

8 GB


Validity

28 Days


Vodafone Play


Zee5



 


 


218


Talktime

Unlimited Calls


Data

6 GB


Validity

28 Days


Vodafone Play


Zee5



 


இந்த திட்டங்களைத் தவிர, வோடபோன் ரூ.250-க்கு கீழ் மேலும் பல திட்டங்களையும் அறிவித்துள்ளது.


அதன்படி, ரூ.249 வோடபோன் திட்டத்தில் பயனர்களுக்கு 3GB (வரையறுக்கப்பட்ட சலுகை) தினசரி அதிவேக தரவை வழங்குகிறது. இது வரம்பற்ற குரல் அழைப்புடன் பயனருக்கு 100 SMS வழங்குகிறது. இந்தத் திட்டம் வோடபோன் ப்ளே மற்றும் ZEE5 ஆகியவற்றிலிருந்து இலவச உள்ளடக்க சேவைகளை வழங்குகிறது.


ரூ.200 திட்டங்களுக்கு கீழ், வோடபோன் ரூ.129, ரூ.149 மற்றும் ரூ 199-க்கு ரீசார்ஜ் வழங்குகிறது.


ரூ.129 ப்ரீபெய்ட் திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாகும். இந்த திட்டத்தில் பயனர்கள் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய குரல் அழைப்புகளைப் பெறுகின்றனர், 2GB 4G தரவு மற்றும் 300 இலவச SMS பெறுகின்றனர்.


ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாகும். இந்த திட்டத்தில் பயனர்கள் ஒரு நாளைக்கு 2GB தரவு மற்றும் நாள் ஒன்றுக்கு 300 உள்ளூர் மற்றும் தேசிய SMS பெறுவார்கள்.


ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் பயனர்கள் 1GB தினசரி தரவையும், வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுடன் ஒரு நாளைக்கு 100 SMS-ம் பெறுவார்கள்.


சில நாட்களுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான BSNL அதன் சிறப்பு கட்டண வவுச்சரை ரூ.247-க்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாக அறிவித்தது. STV 247 பயனர்கள் ஒரு நாளைக்கு 3GB டேட்டாவை 30 நாட்களுக்கு பெறுவார்கள். மேலும் இது ஒரு நாளைக்கு 100 SMS-யைம் வழங்கும். இருப்பினும், இந்த திட்டத்திற்கு வரம்புகள் உள்ளன. குரல் அழைப்பு ஒரு நாளைக்கு 250 நிமிடங்களுக்கு மட்டுமே என மட்டுப்படுத்தப்படும், என்றபோதிலும் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இத்திட்டம் பெரும் போட்டியாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தங்கள் வாடிக்கையாளர்களை கவர தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சில கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வருகின்றன.