Samsung Galaxy F62: தென் கொரிய நிறுவனமான  Samsung, 7000mAh வலுவான பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனான Galaxy F62-வின் விலையை கணிசமாக குறைத்துள்ளது. இந்த போனில் நிறுவனம் சுமார் நான்காயிரம் ரூபாயைக் குறைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Tecno தனது 7000 எம்ஏஎச் பேட்டரி போனான Tecno Pova 2-ஐ இந்தியாவில் வெறும் ரூ. 10,999 க்கு அறிமுகப்படுத்தியது. இந்த வகையில், கடந்த நாட்களில், சாம்சங்குக்கு போட்டியாக டெக்னோ இந்த போனை அறிமுகம் செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், டெக்னோவின் இந்த போனுக்கு கடுமையான போட்டியை கொடுக்க சாம்சங் இந்த பெரிய பேட்டரி போனின் விலைகளை குறைத்துள்ளது என்று நம்பப்படுகிறது.


தொலைபேசியின் புதிய விலை இதோ

Samsung Galaxy F62 ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அதன் 6GB ரேம் வகைகளின் விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்புக்குப் பிறகு,Samsung Galaxy F62 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட்டை வெறும் ரூ .19,999 க்கு வாங்க முடியும். தொலைபேசியின் புதிய விலைகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன் 8GB ரேம் மாறுபாடு பழைய விலையில்தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: Samsung Galaxy F22: அதிரடி தள்ளுபடியில் வாங்க சூப்பர் வாய்ப்பு 


Samsung Galaxy F62-ன் விவரக்குறிப்புகள்


Samsung Galaxy F62 6.7 இன்ச் சூப்பர் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. தொலைபேசி 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் வேலை செய்யும். செயல்திறனுக்காக, 7 நானோமீட்டர் செயல்முறை தொழில்நுட்பம் கொண்ட எக்ஸினோஸ் 9825 செயலி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


Samsung Galaxy F62 கேமரா


புகைப்படம் எடுக்க, Samsung Galaxy F62-ல் குவாட் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் (Mobile Phone) 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. செல்பி எடுக்க போனின் முன் பேனலில் பஞ்ச்-ஹோல் கட்-அவுட் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


7000mAh பேட்டரி


பவருக்கு, இந்த போனில் 7000mAh திறன் கொண்ட பெரிய மற்றும் வலுவான பேட்டரி அமைப்பு உள்ளது. இணைப்பு வசதிக்கு, ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போன்ற அம்சங்கள் தொலைபேசியில் வழங்கப்பட்டுள்ளன. தொலைபேசியின் டைமென்ஷன் 76.3 x 163.9 x 9.5 மிமீ ஆகவும் எடை 218 கிராம் ஆகவும் உள்ளது. இந்த தொலைபேசி இரட்டை சிம் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ALSO READ: அசத்தல் பேட்டரி கொண்ட அட்டகாசமான Samsung Galaxy A22 அறிமுகம் ஆனது!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR