பூமி கண்காணிப்பு செயற்கைகோள் RISAT-2B சுமந்தப்படி PSLVC-46 ராக்கெட்ன ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 5.27 மணிக்கு PSLVC-46 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட RISAT-2B செயற்கைகோளை இந்த ராக்கெட் சுமந்துகொண்டு சென்றுள்ளது.
 
விண்ணில் ஏவப்படுவதற்கான இறுதிகட்ட பணியான 25 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.27 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை RISAT-2B ஏந்திய PSLVC-46 விண்ணில் பாய்ந்தது.



இந்த RISAT-2B புமி கண்காணிப்பு செயற்கைக்கோளை PSLVC46 ஆனது 555 கிமீ உயரத்தில் சுற்றுப்பாதையில் ஏவ உள்ளது என ISRO தெரிவித்துள்ளது.


விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்துவதுடன், விண்வெளி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக ராக்கெட் ஏவுவதை பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 5,000 பேர் அமர்ந்து பார்வையிடும் அளவில் ‘கேலரி’ அமைக்கப்பட்டு இருந்தது. 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் பெயர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி பலர் பதிவு செய்து உள்ளனர்.



இந்த ‘கேலரி’, ஏவுதளத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து பார்வையாளர்களால் ஏவுதளத்தை பார்வையிட முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்