கேம் விளையாடுவது என்பது இப்போது பிரபலமாக இருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு பலரும் கேமிங்களுக்கு அடிமையாகிவிட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்குக்காக கேம்கள் விளையாடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். லேப்டாப் மற்றும் மொபைல்களில் மட்டுமே கேம் விளையாடுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மொபைல்களில் கேம் விளையாடுபவர்கள், நல்ல தரமான மொபைலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உகந்த மொபைல் தான்  Realme 9i 5G. மிகச் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்களில் ஒன்று ரியல்மி நிறுவனத்தின் இந்த மொபைல். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஸ்மார்ட்போனை இந்தியர்கள் எதற்கெல்லாம் அதிகம் பயன்படுத்திகிறார்கள் தெரியுமா?


Realme 9i 5G ஸ்மார்ட்போனை ரியல் மீ நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியிட்டது. பட்ஜெட் விலையில் வெளியான சூப்பரான கேமிங் ஸ்மார்ட்போன். இது MediaTek Dimensity 810 5G பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் முழு HD+ LCD டிஸ்ப்ளே மற்றும் 50எம்பி டிரிபிள் கேமரா, 8எம்பி செல்பி கேமரா உள்ளது. Realme 9i 5G இந்தியாவில் ரூ.21,999 முதல் மெட்டாலிகா கோல்ட், ராக்கிங் பிளாக் மற்றும் சோல்ஃபுல் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது:


Realme 9i 5G-முழு விவரம்


6.6-இன்ச் முழு HD+ (2408 x 1080 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளே. MediaTek Dimensity 810 5G பிராசசர். 4ஜிபி/6ஜிபி ரேம். 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ். 50MP பிரதான கேமரா. 2MP மேக்ரோ கேமரா, 2MP டெப்த் சென்சார் கேமிரா. 8 எம்.பி செல்பி கேமரா. 18W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி. Realme UI 3.0 உடன் Android 12 ஓஎஸ் இருக்கும்.  சிறந்த கேமரா மற்றும் சிறந்த பேட்டரிக்கு இந்த மொபைல் உத்தரவாதம் என சொல்லலாம். மேலும், பட்ஜெட் விலையில் நல்ல மொபைல் எதிர்பார்த்தவர்களுக்கும் இந்த மொபைல் வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம். அதேநேரத்தில் கேமராவில் செல்பிக்கு உகந்ததாக இருக்காது. ரேம் விருப்பங்களில் 4ஜிபி/6ஜிபி ரேம்களில் மட்டுமே கிடைக்கும். சேமிப்பகத்தை வரிவாக்கம் செய்ய முடியாது.


மேலும் படிக்க | அதிரடி சலுகை! ரூ.20000க்குள் கிடைக்கும் சூப்பரான 5 ஸ்மார்ட்போன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ