5 ஆண்டுகள் இலவசமாக TV பார்க்க வெறும் ரூ.500 போதும்!
இலவச திட்டங்கள் பலவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் மனதில் தங்களுக்கென ஓர் இடத்தினை பிடித்திருக்கும் ரிலையன்ஸ் நிறைவனம் தற்போது ரூ.500-க்கு Set-top பாக்ஸினை அறிமுகம் செய்யவுள்ளது!
இலவச திட்டங்கள் பலவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் மனதில் தங்களுக்கென ஓர் இடத்தினை பிடித்திருக்கும் ரிலையன்ஸ் நிறைவனம் தற்போது ரூ.500-க்கு Set-top பாக்ஸினை அறிமுகம் செய்யவுள்ளது!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் Big TV செட்-டாப் பாக்ஸினை தங்களுக்கு அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் வெறும் ரூ.500 மட்டும் செலுத்து முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக சுமார் 50 ஆயிரம் தபால் நிலையங்களுடன் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தபால் நிலையங்கள் மூலம் செட்-டாப் பாக்ஸினை பதிவுசெய்யும் நடைமுறையானது வரும் ஜூன் 20 முதல் அறிமுகம் செய்யப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி ராஜஸ்தான், பஞ்சாப், உத்ரகாண்ட், ஆந்திரா, கர்நாட்டகா, அருணாச்சல் பிரதேஷ், அசாம், மணிப்பூர், மேகாளயா, மிஜ்ரோம், நாகாலாந்த் மற்றும் சிக்கிங் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மக்கள் இந்த வசதியினை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் Big TV இயக்குனர் விஜேந்திர சிங் தெரிவிக்கையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இனி HD தர வீடியோக்களை மளிவு விலையில் காணமுடியும். சுமார் 130 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செட்-டாப் பாக்ஸின் மூலம் பல கட்டண சேனல்களையும் ஒரு ஆண்டு காலத்திற்கு வாடிக்கையாளர்கள் இலவசமாக பார்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேலையில் 5 ஆண்டு காலத்திற்கு 500-க்கும் மேற்பட்ட FTA(கட்டணமில்லா சேனல்களை) பார்க்க இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.