புதிய சக்திவாய்ந்த 650CC ஸ்க்ராம்ப்ளர் பைக்கை Royal Enfield விரைவில் அறிமுகம்
நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளரான ராயல் என்ஃபீல்ட் தொடர்ந்து தனது போர்ட்ஃபோலியோவை புதுப்பித்து வருகிறது.
புது டெல்லி: நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளரான ராயல் என்ஃபீல்ட் தொடர்ந்து தனது போர்ட்ஃபோலியோவை புதுப்பித்து வருகிறது. சமீபத்தில், நிறுவனம் தனது புதிய பைக்கிற்கான 'ஸ்க்ரீம்' என்ற வர்த்தக முத்திரையை வெளியிட்டுள்ளது. முன்னதாக, நிறுவனம் Shotgun என்ற பெயரில் ஒரு வர்த்தக முத்திரையை தாக்கல் செய்திருந்தது. வல்லுநர்களின் கூற்றுப்படி, நிறுவனம் இந்த வர்த்தக முத்திரையை அதன் வரவிருக்கும் புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு பயன்படுத்தலாம்.
ராயல் என்ஃபீல்ட்டின் (Royal Enfield) 650 சிசி பிரிவில் தற்போது இரண்டு பைக்குகள் மட்டுமே உள்ளன, இதில் கான்டினென்டல் ஜிடி மற்றும் இன்டர்செப்டர் (Royal Enfield Interceptor) ஆகியவை அடங்கும். இந்த புதிய பைக் இந்த பிரிவில் மூன்றாவது பைக்காக இருக்கலாம். ட்ரையம்ப்ஸ் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் 900 சிசி பிரீமியம் பிரிவில் ஆரம்ப விலை ரூ .9 லட்சம் ஆகும். அதே நேரத்தில், ராயல் என்ஃபீல்டின் 650 சிசி பைக் இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்டல் ஜிடி விலை சுமார் 3 லட்சம் ரூபாய் ஆகும்.
ALSO READ | Royal Enfield பைக் பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்! விரைவில் Hunter 350 அறிமுகம்
தகவல்களின்படி, நிறுவனம் சமீபத்தில் தனது புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக்கின் பெயருக்கான வர்த்தக முத்திரையை தாக்கல் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்ட் இப்போது அவர்களின் புதிய பைக்குகளான ஹண்டர் மற்றும் ஷாட்கன் ஆகியவற்றிலும் வேலை செய்கிறது. மேலும், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 இன் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிறுவனம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் சந்தையில் விற்பனைக்கு கிளாசிக் 350 ஐ அறிமுகம் செய்ய முடியும்.
விலை - ராயல் என்ஃபீல்ட் 650 சிசியின் விலை சந்தையில் ஏற்கனவே உள்ள மற்ற 650 சிசி பைக்குகளை மனதில் வைத்து முடிவு செய்யப்படும். இந்த இரண்டு பைக்குகளை விட இந்த பைக் மலிவாக இருக்கும் என்று நம்புகிறோம். 2021 க்குள் அறிமுகம் செய்யப்படும் நான்கு பைக்குகளில் இந்த பைக் ஒன்றாகும்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR