ரஷியாவை சேர்ந்த 2 வீரர்கள் புவியீர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் நீண்ட நேரம் பயணித்து சாதனை படைத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து 150 பில்லியன் டாலர் (ரூ96 லட்சத்து 75 ஆயிரம் கோடி) செலவில் பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது.


இங்கு, 6 மாதத்துக்கு ஒரு முறை 3 வீரர்கள் அங்கு தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்து கொண்டிருகின்றனர். அவர்கள் 8 மணி 7 நிமிடம் விண்வெளியில் பயணித்தனர்.


இந்நிலையில் அவர்களுக்கு அடுத்து தற்போது, ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிசுர்கின், ஆன்டன் ஸ்காப்லெரோவ் என்ற 2 வீரர்கள் புவியீர்ப்பு சக்தி இல்லாத விண்வெளி ஆய்வகத்தில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


நேற்று அவர்கள் 2 பேரும் 8 மணி 13 நிமிடம் விண்வெளியில் பயணித்து சாதனை படைத்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர்.