CHATGPT: AI சாட்போட்கள் இந்த வேலைகளை காலி செய்யும்; முதன்முறையாக ஒப்புக்கொண்ட சாம் ஆல்ட்மேன்
சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-ன் சாட்போட்கள் அனைத்து வேலைகளை செய்யும் என்பதால் மனிதர்கள் வேலை இழப்பை தடுக்க முடியாது என முதன்முறையாக சாம் ஆல்ட்மேன் பொதுவெளியில் பேசியிருக்கிறார்.
சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் ஏஐ தொழில்நுட்பம் என்னென்ன மாற்றங்களை செய்யப்போகிறது என்பதை வெளிப்படையாக பேசியுள்ளார். இது சமூகத்தை மாற்றியமைக்கும் தொழில்நுட்பமாக இருக்கும். ஏஐ தொழில்நுட்பம் இப்போது இருக்கும் நிறைய வேலைகளை செய்யக்கூடிய ஒன்று என்பதால் நிறைய பேர் வேலை இழப்பை எதிர்கொள்ள நேரிடும். இது கவலைப்படக்கூடிய விஷயம் என்றாலும், நம் வாழ்க்கையை கடுமையாக மேம்படுத்த மனிதகுலம் இதுவரை கண்டிராத தொழில்நுட்பமாக இருக்கும் என ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | சாட்ஜிபிடி பிளஸ் இந்தியாவுக்கு வந்தாச்சு..! அணுகலை பெறுவது எப்படி?
தொடர்ந்து அவர் பேசும்போது, நாங்கள் ஏஐ தொழில்நுட்பம் குறித்து கவலைப்படுகிறோம். அதனால் மக்கள் மகிழ்ச்சியடையவும் வேண்டாம். நாங்கள் கவலைப்படுவதால் இது ஏற்படுத்தப்போகும் மாற்றங்களை எங்களால் தடுக்க முடியும் என்ற அர்த்தமில்லை. இது எத்தகைய மாற்றங்களை எல்லாம் கொண்டு வரப்போகிறது என்பதை எங்களால் யூகிக்கவே முடியவில்லை. அந்தளவுக்கு மிகப்பெரிய தொழில்நுட்பம் இது. அதேநேரத்தில் ஏஐ தொழில்நுட்பம் குறித்த எங்களின் கவலை மக்களிடையே மகிழ்ச்சியை கொடுத்தால் நல்லது தான்.
ஆனால் உண்மை என்னவென்றால் மக்கள் எங்களை நம்ப வேண்டாம். இந்த பணியில் இருக்கும் என்னையும் நம்ப வேண்டாம். ஏஐ ஏற்படுத்தப்போகும் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அது எல்லையற்ற பரப்பை நோக்கி ஏற்கனவே நகர்ந்துவிட்டது. அதன்மூலம் முன்னேறுவதற்கான சாத்தியகூறுகளை கண்டுபிடிக்க மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கியதன் முக்கிய நோக்கம், நம் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய அளவுக்கு முன்னேற்ற வேண்டும் என்பது மட்டும் தான். இதன் பின்னணியில் மனித நேயம் இருக்கிறது. அது இன்னும் வளர்ச்சியடையும் என நம்புகிறோம் என சாம் ஆல்ட்மேன் முதன்முறையாக வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
கூடுதலாக, மாணவர்களிடையே ஏஐ சாட்போட்கள் சோம்பலை ஊக்குவிக்கும் திறன் உட்பட, கல்வியில் AI-ஆல் இயக்கப்படும் சாட்போட்களின் சாத்தியமான விளைவுகள் பற்றியும் அவர் பேசியிருக்கிறார். கல்வி மாற வேண்டும். இது தொழில்நுட்பத்தில் பல முறை நடந்துள்ளது. கால்குலேட்டர் கிடைத்ததும், கணிதம் கற்பிக்கும் முறை மற்றும் மாணவர்களை சோதித்த விதம் முற்றிலும் மாறிவிட்டது. அதுபோன்ற மாற்றத்தையே சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்போட்கள் உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் சாம் ஆல்ட்மேன்.
மேலும் படிக்க | உங்கள் மொபைலில் 5ஜி சேவையை தொடங்க முடியவில்லையா? ஈஸி டிப்ஸ்..!
மேலும் படிக்க | ChatGPT: ஓபன் ஏஐ சாட்ஜிபிடியால் ஆபத்தில் இருக்கும் 20 தொழில்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ