இந்தியாவில் களமிறங்கும் புதிய Samsung Galaxy F22
Samsung Galaxy F22 அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது
Samsung Galaxy F22 Price In India: இந்தியாவில் Samsung Galaxy F22 விலை மற்றும் விற்பனை தேதி அடுத்த வாரம் வெளியிடப்படும் என்பதை நிறுவனம் வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளது. Galaxy F22 இந்தியா வெளியீடு ஜூலை 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும். அறிமுக தேதி பிளிப்கார்ட்டில் காணப்பட்டது, இது வரவிருக்கும் ஸ்மார்ட்போனை விற்பனை செய்வதற்கான இ-காமர்ஸ் தளமாக இருக்கும்.
இந்திய சந்தைகளில் வரவேற்பை பெற்றுள்ள கேலக்ஸி எப் சீரிஸின் (Samsung Galaxy) விற்பனையை அதிகரிக்கும் வகையில் பிளிப்கார்ட் (Flipkart) உடன் சாம்சங் கைக்கோர்த்துள்ளது. இத்துடன் சாம்சங் நிறுவனத்தின் இணையதளங்களிலும் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் Galaxy F-சீரிஸ் தொலைபேசியில் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 6,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 48 எம்பி குவாட் கேமராக்கள் இடம்பெறும்.
ALSO READ | Samsung Galaxy S21 Plus: Samsung தொலைபேசியில் ரூ .10,000 வரை தள்ளுபடி
தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு இந்திய சந்தைகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப்-22 என்ற எப் சீரிஸ் ஸ்மார்ட் போனில் 6.4 அங்குலத்தில் உருவாகியுள்ள இந்த ஸ்மார்ட் போன் 6000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது. கேலக்ஸி எப்-22 சாம்சங் நிறுவனத்தின் 4-வது ஸ்மார்ட் போன் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR