Samsung Galaxy M32 5G Launch In India: சாம்சங் போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. சாம்சங் இந்தியா, கேலக்ஸி எம் 32 இன் 5 ஜி பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Samsung Galaxy M32 5G-யின் விலை ரூ .18,999 ஆகும். செப்டம்பர் 2 மதியம் 12 மணிக்கு இந்த போனின் விற்பனை தொடங்கும். இந்த தொலைபேசி இரண்டு வகைகளில் கிடைக்கும். ஒன்று 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ், மற்றொன்று 8 ஜிபி ரேம் மற்றும் 128 இண்டர்னல் ஸ்டோரேஜ். மெமரி கார்டைப் பயன்படுத்தி மெமரியை 1TB வரை விரிவாக்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம் 32 5 ஜி அம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


சாம்சங் கேலக்ஸி எம் 32 5 ஜி: விவரக்குறிப்புகள்


இந்த போனில் HD + ரெசல்யூஷனுடன் 6.5 அங்குல V- டிஸ்ப்ளே உள்ளது. சாம்சங் கேலக்ஸி M32 5G முன்பக்க கேமராவை கொண்டிருக்கும் ஒரு நாட்சுடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி M32 5g இல் 5000 mAh பேட்டரி  கிடைக்கிறது. இந்த தொலைபேசி 15W வேகமான சார்ஜிங்கை (fast charging) ஆதரிக்கிறது.


ALSO READ: அட்டகாசமான Samsung Galaxy M32 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிப்பு


சாம்சங் கேலக்ஸி எம் 32 5 ஜி: கேமரா


இந்த போன் ஸ்லேட் பிளாக் மற்றும் ஸ்கை ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எம் 32 5 ஜி குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் முதன்மை லென்ஸ் 48 எம்பி ஆகும். முதன்மை லென்ஸுடன், சாம்சங் கேலக்ஸி எம் 32-வில், 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன.  முன் கேமரா 13 எம்.பி-ஐக் கொண்டது.


இந்த சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 720 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 5G பேண்டுகளை ஆதரிக்கிறது. நிறுவனம் 2 வருட OS ஆதரவுக்கான உறுதியை அளித்துள்ளது. இந்த போன் (Mobile Phone), சாம்சங்கின் ஒன் யுஐ 3.1 உடன் ஆண்ட்ராய்டு 11 உடன் வருகிறது.


ALSO READ: Samsung Galaxy F62 விலை குறைந்தது: புது விலை, விவரக்குறிப்புகள் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR