Samsung Galaxy F42, Galaxy M52: இன்று முதல் விற்பனை துவக்கம், விலை அம்சங்கள் இதோ
அக்டோபர் 3 முதல், பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேசில் Galaxy F42 5G-ன் விற்பனை தொடங்குகிறது. அமேசான் பிரைம் மற்றும் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் இன்று முதல் இதை வாங்கலாம்.
Samsung Galaxy F42, Galaxy M52: சாம்சங் இந்தியாவில் இரண்டு புதிய மிட்-ரேஞ் 5 ஜி போன்களான Galaxy F42 மற்றும் Galaxy M52-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது இந்த இரண்டு தொலைபேசிகளும் விற்பனைக்கு கிடைக்கும்.
Galaxy M52-ன் 5G போனில், 6GB RAM+128GB வகை சிறப்பு அறிமுக விலையில் ரூ .26999 க்கு கிடைக்கிறது. 8GB RAM +128GB மாடலின் விலை ரூ .28999 ஆகும். அக்டோபர் 3 முதல் அமேசானின் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவலில் (Amazon Great India Festival) இவற்றை வாங்கலாம். மேலும், இவை Samsung.com, Flipkart.com மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகளிலும் கிடைக்கும்.
இன்றிலிருந்து சேல் தொடங்குகிறது
Galaxy F42 5G 6GB RAM+128GB வேரியன்டின் விலை, இந்த சிறப்பு சலுகையின் கீழ் ரூ .17999 ஆகும். 8GB RAM +128GB வேரியண்டின் விலை ரூ .19999 ஆகும். அக்டோபர் 3 முதல், பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேசில் Galaxy F42 5G-ன் விற்பனை தொடங்குகிறது. அதே நேரத்தில், அமேசான் பிரைம் மற்றும் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் இன்று முதல் (அக்டோபர் 2, 2021) இதை வாங்கலாம். இந்த சலுகை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: Great Indian Festival Sale: கவர்ச்சிகரமான சலுகை - தள்ளுபடிகள் குறித்து விவரம்
சாம்சங் கேலக்ஸி F42 5G இன் அம்சங்கள்
Samsung Galaxy F42 5G-ல் 6.6 இன்ச் FHD+ ஸ்கிரீன் உள்ளது. இதில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிற்து. இந்த சாதனம் MediaTek Dimensity 700 5G பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இல் உருவாக்கப்பட்ட One UI 3.1 இல் இயங்குகிறது. பின்புறத்தில் 64MP பிரதான கேமரா சென்சார், 5MP அல்ட்ராவைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் உட்பட மூன்று கேமராக்கள் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி எம் 52 5 ஜி அம்சங்கள்
இது 6.7 இன்ச் 1080p சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 32 எம்பி கேமரா கொண்டது. M52 குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 சிஸ்டம்-ஆன்-சிப் மூலம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மென்பொருள் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யுஐ 3.1 ஆகும்.
புகைப்படம் எடுப்பதற்கு, இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) எம் 52 64 எம்.பி முதன்மை கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மற்றும் 5 எம்பி மேக்ரோ கேமராவுடன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த 5,000mAh பேட்டரி 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. M52 இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.
ALSO READ: Amazon-ல் சாம்சங் போன்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடிகள்: முந்துங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR