விற்பனைக்கு வந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ
விற்பனைக்கு வந்திருக்கும் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் உடனடியாக சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது அதனுடைய சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது 2022ஆம் ஆண்டின் முதல் Galaxy F தொடர் ஸ்மார்ட்போன் ஆகும். ஸ்மார்ட்போனில் 5G கனெக்ஷன் மட்டுமின்றி மற்ற சுவாரஸ்யமான அம்சங்களும் உள்ளன. Samsung Galaxy F23 5G ஸ்மார்ட்போனில் விலை மற்றும் அற்புதமான அம்சங்களைப் தெரிந்து கொள்வோம்
Galaxy F23 5G விலை
Galaxy F23 5G 4GB + 128GB ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,499. அதே நேரத்தில், 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ 18,499 ஆகும். ஸ்மார்ட்போனின் முதன்முறையாக விற்பனைக்கு வந்துள்ளதால், 1500 ரூபாய் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, தற்போது, 4ஜிபி + 128ஜிபி ஸ்மார்ட்போன் விலை 15,999 ரூபாய்க்கும், 6ஜிபி + 128ஜிபி வகையின் விலை16,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கலர்களை பொறுத்தவரை அக்வா ப்ளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் என இரு வண்ணங்களில் உள்ளன.
சிறப்பம்சம் என்ன?
சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி, பிரீமியம் மாடலைத் தவிர, பெரும்பாலான சாம்சங் ஸ்மார்ட்போன்களைப் போலவே பிளாஸ்டிக் பேனலைக் கொண்டிருக்கிறது. இது 2408 x 1080 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் ஆகியவற்றுடன் 6.6-இன்ச் TFT LCD பேனலைச் சுற்றி இருக்கும். ஸ்கிரீன் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 750G SoC மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான One UI 4.1-ஐ கொண்டிருக்கும். 2 வருட OS புதுப்பிப்புகளையும் 4 வருட பாதுகாப்பு அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளன
கேமரா சிறப்பம்சம்
இந்த ஸ்மார்ட்போன் 50MP Samsung ISOCELL JN1 முதன்மை சென்சார், 8MP 123° அல்ட்ரா-வைட் யூனிட் மற்றும் 2MP மேக்ரோ ஸ்னாப்பர் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும். முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 எம்பி ஷூட்டர் கேமரா உள்ளது.
மேலும் படிக்க | ரஷ்யா - உக்ரைன் போரால் கலைந்த எலான் மஸ்கின் கனவு
Samsung Galaxy F23 5G பேட்டரி
ஃபோனில் டூயல் சிம், 5ஜி (12 பேண்டுகள்), டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிஎன்எஸ்எஸ், சாம்சங் பேக்கான என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆகியவை இருக்கும். இதில் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது அதிகபட்சமாக 25W விகிதத்தில் சார்ஜ் செய்ய முடியும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR