புதுடெல்லி: சவுதி அரேபியா உலகின் மிக வேகமான 5G பதிவிறக்க வேகத்தை (5G Download Speed) பதிவு செய்துள்ளது. அந்த நாடு வினாடிக்கு 377.2 மெகாபைட் (Mbps) வேகத்தை எட்டியது. 5G வேகத்தைப் பொறுத்த வரை தென் கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த தகவல்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாவது இடத்தில் உள்ள தென் கொரியாவின்( South Korea) 5G பதிவிறக்க வேகம் வினாடிக்கு 336.1 மெகாபைட் (Mbps) என்ற சராசரி வேகத்தில் உள்ளது என்று தொழில்துறை டிராக்கர் ஓபசிக்னலின் அறிக்கை கூறுகிறது. இது 5G நெட்வொர்க்குகள் கொண்ட 15 நாடுகளில் ஜூலை 1 முதல் செப்டம்பர் 28 வரை தரவுகளை சேகரித்துள்ளது.


“ஒவ்வொரு நாட்டிலும்,  5G  பயனர்கள் சராசரி பதிவிறக்க வேகம் 4G -யை விட பல மடங்கு வேகமாக உள்ளதை உணர்கிறார்கள். 5G வேகத்தில் முன்னேற்றம் தாய்லாந்தில் 4G யை விட 15.7 மடங்கு வேகமாகவும், நெதர்லாந்தில் 1.6 மடங்கு அதிகமாகவும் உள்ளது. இந்த நாடுகளில், பயனர்கள் 5G பதிவிறக்க வேகம் 4G-ஐ விட 5 முதல் 6 மடங்கு வேகமாக இருப்பதைக் காண்கிறார்கள்” என்று ஓபன்சிக்னல் அறிக்கை தெரிவித்துள்ளது.


ALSO READ: நிலவில் கூடிய விரைவில் 4G Network: அசத்தும் NASA, Nokia ஜோடி!!


இரண்டு நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளிலும், பயனர்கள் 100 Mbps-ஐ விட அதிகமான சராசரி 5 ஜி பதிவிறக்க வேகத்தை பெறுகிறார்கள் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.


5G பதிவிறக்க வேகம் அதிகமாக உள்ள 15 நாடுகளின் முழு பட்டியல் இதோ:


1. சவுதி அரேபியா


2. தென் கொரியா


3. ஆஸ்திரேலியா


4. தைவான்


5. ஸ்பெயின்


6. குவைத்


7. கனடா


8. இத்தாலி


9. தாய்லாந்து


10. சுவிட்சர்லாந்து


11. இங்கிலாந்து


12. ஹாங்காங்


13. ஜெர்மனி


14. நெதர்லாந்து


15. அமெரிக்கா


5G அல்லது 5G பயன்பாடுகளில் பயனர்கள் செலவழிக்கும் நேரம் 5G பயனர்கள் அனுபவிக்கும் ஒட்டுமொத்த அனுபவத்தில் ஒரு முக்கிய காரணியாகும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.


"நாம் இன்னும் 5G சகாப்தத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். இது குறைந்தபட்சம் ஒரு தசாப்தத்திற்கு நீடிக்கும். ஏனெனில் முதல் 5G சேவைகள் 2019 இல் தான் தொடங்கப்பட்டன. மேலும் பல நாடுகளில் 5G மொபைல் சேவைகள் முதல் முறையாக தொடங்கப்படுவதையும் நாம் காண்கிறோம்" என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 


ALSO READ: Video தேடலை எளிதாக்க புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது Facebook!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR