மனிதனின் வாழ்வில் இணையம் ஒரு இன்றியமையா நண்பனாக மாறிவிட்டது. தற்போதைய காலக்கட்டத்தினில் மனிதர்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளுக்கும் இணையம் ஓர் முக்கிய காரணியாக அமைந்துவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இக்கால குழந்தைகளுக்கு ட்விட்டரும், பேஸ்புக்கும் விளையாட்டு பொருட்கள். இதனை உனர்ந்து கொண்டே இந்த நிறுவனங்கள் தங்களது பயனர்களை கவர பல்வேறு வழிகளில் புதுமைகளை புகுத்தி வருகின்றன. அந்த வகையினில் ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களை ஈர்க்க ’ட்விட்டர் லைட்’ எனும் புதிய செயலி ஒன்றினை அளிக்கவுள்ளது.


’ட்விட்டர் லைட்’ பயனர்களின் மொபைல் டேட்டா-வினை சேமிக்க வழிவகுக்கும் வகையினில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த செயலிக்கான சோதனை ஓட்டத்தினையும் துவங்கிவிட்டது ட்விட்டர் நிறுவனம்.


பிலிப்பைன்ஸ் நாட்டில் முதலாவதாக இந்த ட்விட்டர் லைட் செயல்படுத்தப் பட்டுள்ளது. இந்த செயலி Android 5.0 மற்றும் அதற்கு அடுத்து வந்துள்ள பதிப்புகளில் இயங்குகிறது. ஆங்கிலம் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் என இரு மொழிகளில் தற்போது செயல்படும் வகையினில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2G மற்றும் 3G நெட்வொர்க்குகளில் இடற்பாடுகள் இன்றி பயன்படுத்த வழிவகுக்கின்றது.


ட்விட்டர் செயலியினில் இருப்பது போலவே அனைத்து வசதிகளும் இருக்கும் வகையினில் இந்த ட்விட்டர் லைட் வடிவமைக்கப்பட்டுளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.