OMG 24 காரட் தங்க டிவியை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!! விவரம் உள்ளே
டிவி தூய தங்கத்தால் ஆனது மட்டுமல்ல, 100 அங்குல நீர்ப்புகா தொலைகாட்சி ஆகும்.
புதுடெல்லி: நீங்கள் நிறைய டிவியை பார்த்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் எப்போதாவது 24 காரட் தங்க டிவியைப் பார்த்திருக்கிறீர்களா? சமீபத்தில், இங்கிலாந்து நிறுவனம் இதுபோன்ற ஒரு டிவியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த டிவியை அக்வாவிஷன் (Aquavision) என்ற பிரிட்டிஷ் நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். இந்த நிறுவனம் இதே போன்ற ஆடம்பர தொலைக்காட்சிகளை உருவாக்கி வருகிறது. இந்த தங்கம் பதிக்கப்பட்ட டிவியை "ஹரோட்ஸ்" என்ற நைட்ஸ் பிரிட்ஜ் கடையில் நிறுவனம் விற்பனைக்கு வைத்துள்ளது.
அதன் சிறந்த அம்சங்கள்:
இந்த டிவி தூய தங்கத்தால் ஆனது மட்டுமல்ல, அதன் விவரக்குறிப்புகளும் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இது எல்சிடி திரை (LCD Screen) கொண்டது. இதன் மிகச் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், இந்த 100 அங்குல நீர்ப்புகா தொலைகாட்சி (Waterproof TV) ஆகும். இதனுடன், இது 4 கே வரையறையைக் கொண்டுள்ளது. இது சிறந்த மற்றும் தெளிவான பட அனுபவத்தை அளிக்கிறது. இந்த டிவியின் ஒலி அமைப்பும் மிகவும் கலகலப்பானது.
அமிரோ டிவியின் விலை:
இந்த டிவியின் விலை 1,08,000 பவுண்ட் எனக் கூறப்படுகிறது, அதாவது இந்திய நாணயத்தின்படி இதன் மதிப்பு சுமார் 1 கோடி ஆகும். பணக்காரர்களை மனதில் வைத்து இந்த டிவி தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஆதிக்கம் செலுத்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது, இப்போது வளர்ச்சிக்கான நேரம் என்று கூறலாம். மக்கள் இப்போது தங்கள் தரத்தை பராமரிக்க விரும்புகிறார்கள். அதே போல் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்தில் தங்கள் தரத்தை பராமரிக்க விரும்புகிறார்கள்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.