ஏர்டெல் பிரீபெயிடு வாடிக்கையாளர்களுகாக புதிய சலுகை ஒன்றை ஜியோவின் திட்டத்திற்கு போட்டியாக அறிவித்து வருகின்றனர். பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் வாடிகையாளர்களை தக்க வைத்து கொள்ளுவதற்கும், அவர்களின் தேவைகளை உணர்ந்தும், புதிய ரீ- சார்ஜ் திட்டங்கள் மற்றும், டேட்டா சேவை ஆகியவற்றில் புதிய மாற்றங்களை அறிவித்து வருகின்றன. புதியதாக அறிவிக்கப்படும் சில திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெருகின்றனர். அந்த வகையில், ஏர்டெல்லின் ரூ.399 வேலிடிட்டி நாட்கள் மாற்றப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன்படி, ரூ. 399-கு ரீ-சார்ஜ் செய்யும் ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு நாளைக்கு 4-ஜி வேகத்தில், 1-ஜிபி டேட்டா, அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ரோமிங் கால்ஸ், நாள் ஒன்றுக்கு 100 SMS கொள்ளலாம். இந்த ரீசார்ஜ் திட்டம், 70 நாட்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்தத் திட்டத்தை, 84 நாட்களுக்குப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல், போல் ரூ.149 திட்டத்தில் 28 நாட்களுக்கு செயல்படும் அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ் ரோமிங் கால்ஸ், நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் 100 SMS பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.