புத்தாண்டுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருப்பதால், இந்த ஆண்டின் விற்பனையை அமோகமாக முடிப்பதற்கு ஸ்கோடா, வோல்ஸ்வேகன் உள்ளிட்ட கார்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடிகளும், எக்ஸ்சேஞ்ச் போனஸூம் கொடுக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஷாக் மற்றும் ஸ்லாவியா
(Kushaq And Slavia)


ஸ்கோடாவின் குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய இரண்டு கார்களுக்கும் அதிகபட்சமாக ரூ.50,000 வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கார்களுக்கும் நிறுவனம் நான்கு வருட பராமரிப்பு இலவசமாக வழங்குகிறது.


மேலும் படிக்க | நவம்பர் மாத கார் விற்பனையில் 111% வளர்ச்சி பெற்ற மாருதி டாடா மலிவு விலை கார்கள்


டைகுன்
(Taigun)


வேல்ஸ்வேகனின் டைகுன் கார்களுக்கு ரூ.5,000 வரை பணத்தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நான்கு வருட சேவைத் தொகுப்பும் இலவசம். மேலும், மேனுவல் ஏசிக்கு ரூ. 15,000 சலுகை கொடுக்கப்படுகிறது. MY22 மற்றும் MY23 ஆகிய இரண்டு மாடல்களுக்கும் ரூ.10,000 வரையிலான லாயல்டி போனஸ் மற்றும் சமமான கார்ப்பரேட் தள்ளுபடியையும் வழங்குகிறது.


உயர்-ஸ்பெக் டாப்லைன் டிரிமை நீங்கள் தேர்வுசெய்தால், அது ரூ.20,000 கார்ப்பரேட் தள்ளுபடியுடன் வருகிறது.பேஸ்-ஸ்பெக் கம்ஃபோர்ட்லைன் மற்றும் ரேஞ்ச்-டாப்பிங் ஜிடி டிசிடி வகைகளுக்கு எந்த பணத் தள்ளுபடியும் கிடைக்காது. ஹைலைன் டிரிம் MY2022 யூனிட்டுகளுக்கு ரூ. 90,000 வரையிலும், MY2023 டைகுனுக்கு ரூ. 85,000 வரையிலும் மொத்த சேமிப்பை பெறலாம். 


விருட்டஸ்
(Virtus)


வோக்ஸ்வாகன் விர்டஸூக்கு மொத்தமாக 65 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. கம்ஃபோர்ட்லைன் டிரிமைத் தேர்வுசெய்தால் மட்டுமே இந்த தள்ளுபடிகளை நீங்கள் முழுமையாக பெற முடியும். இதுதவிர மேனுவல் ஏசிக்காக ரூ.15,000 நீங்கள் கூடுதலாக சேமிக்க முடியும். ரூ. 10,000 லாயல்டி போனஸை வழங்குகிறது. அதே சமயம் டாப்லைன் AT-க்காகச் சேமிக்கும் அனைத்து டிரிம்களிலும் ரூ. 10,000 கூடுதல் கார்ப்பரேட் தள்ளுபடியும் கிடைக்கிறது.


மேலும் படிக்க | UPI Transaction Limit: மொபைல்ல பணம் அனுப்புபவரா? இனி கொஞ்சம் கஷ்டம்! யூபிஐ அலர்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ