பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான மோட்டோரோலா இந்திய சந்தையில் விரைவில் ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தனது ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த முன்னணி இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டுடன் கூட்டுசேர்ந்துள்ளது. ஸ்மார்ட் டிவியுடன் இந்திய சந்தையில் நுழைவதன் மூலம் மோட்டோரோலாவும் சியோமி, சாம்சங், பானாசோனிக், வி.யூ, தாம்சன் போன்ற நிறுவனங்களின் வரிசையல் ஸ்மார்ட் டிவி வெளியிடும் நிறுவனங்களின் வரிசையில் இணையும். 


மோட்டோரோலா தனது ஸ்மார்ட் டிவிகளின் ஆன்லைன் விற்பனைக்கு பிளிப்கார்ட்டை அதிகாரப்பூர்வ பங்காளியாக ஆக்கியுள்ளது.


மோட்டோரோலா ஸ்மார்ட் டிவியின் சமீபத்தில் வெளிவந்த அம்சங்களின்படி, மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 9 பைவில் இயங்கும். அதாவது, இந்த ஸ்மார்ட் டிவியில் முழுமையான வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாட்டின் வசதியையும் வாடிக்கையாளர்கள் பெறுவர்.


மோட்டோரோலாவைத் தவிர, ஒன்பிளஸ் தனது ஒன்பிளஸ் டிவியை இந்த மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. முன்னதாக ஒன்பிளஸ் டிவியின் சின்னம் கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஒன்பிளஸ் டிவியானது இந்தியாவில் வரும் செப்டம்பர் 26 அன்று விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மோட்டோரோலாவின் அடுத்த ஸ்மார்ட் டிவியில் MEMC ஆதரவை வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் பொருள் திரையின் மறுமொழி விகிதம் உள்ளடக்கத்திற்கு ஏற்ப மாறுபடும். இது தவிர, காட்சி மாற்றத்தின் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து பயனர்களுக்குத் தென்படுத்தாது. இணையத்தில் கசிந்த தகவல்களின் படி, இதற்கு முன் ஒலி பட்டி கொடுக்கப்படலாம் என தெரிகிறது, இது திரையின் அடிப்பகுதியில் இணைக்கப்படும் எனவும் கருதப்படுகிறது.


இந்த ஸ்பீக்கரில் டி.டி.எஸ் ட்ரூசரவுண்ட் டால்பி ஆடியோ போன்ற தொழில்நுட்பம் பொருத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த டிவியைப் பற்றிய விலை மற்றும் பிற தகவல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே அறியப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.