கொரோனா நோயாளிகளுக்கு Snapdeal-ன் பரிசு: சஞ்சீவனி செயலி அறிமுகம்
உலகின் பெரிய நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. இந்த நிலையில், ஈ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் கோவிட் -19 நோயாளிகளுக்காக ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. உலகின் பெரிய நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவி வருகின்றன. இந்த நிலையில், ஈ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் (Snapdeal) கோவிட் -19 நோயாளிகளுக்காக ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளது.
Snapdeal சஞ்சீவானி (Sanjeevani) என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தின் மூலம், பிளாஸ்மா தேவைப்படுபவர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டு நல்ல ஒருங்கிணைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம், பிளாஸ்மா தேவைப்படுபவர்கள் பிளாஸ்மா நன்கொடையாளர்களை எளிதாக தொடர்பு கொள்ளலாம். ஸ்னாப்டீல் அதன் வரம்பு எல்லைகளை பயன்படுத்தி சிறிய நகரங்கள் மற்றும் ஊர்களில் பிளாஸ்மா நன்கொடையாளர்களைத் தேடி பிளாஸ்மா தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும். இந்த மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் சஞ்சீவனியை எளிதாக அணுகலாம்.
இது எவ்வாறு செயல்படுகிறது
கொரோனா (Coronavirus) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் சஞ்சீவனியில் மொபைல் எண்கள் / மின்னஞ்சல் ஐடிகள் மூலம் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இது தவிர, இரத்த வகை, வயது, இருப்பிடம், தகவல் போன்ற சில முக்கியமான தகவல்களையும் கொடுக்க வேண்டும். பதிவு செய்து முடிந்ததும், நன்கொடையாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் ஒரு சரியான இணைப்பாக செயல்படும். இதில் ஒரு இடம் பொருந்தியவுடன், ஸ்னேப்டீல் ஒரு அல்காரிதம் மூலம் டோனர்கள் மற்றும் நோயாளிகள் அருகிலுள்ள பிளாஸ்மா வங்கிக்கு சென்று பிளாஸ்மா நன்கொடை செய்யவோ அல்லது பெறவோ முடியும்.
சஞ்சீவனி தளத்தில் இந்த வகையில் பதிவு செய்யலாம்:
- சஞ்சிவனி தளத்தில் பதவி செய்ய கொரோனா நோயாளிகள் மற்றும் கொரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://m.snapdeal.com/donate/covidhelp -க்கு செல்லவும்.
- இரத்த வகை, நோயாளி குணமடைந்த தேதி, இடம், வயது, மருத்துவரின் பரிந்துரை போன்ற முக்கியமான தகவல்களை வலைப்பக்கத்தில் நிரப்ப வேண்டும்.
- இரத்த வகை மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில், நன்கொடையாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் ஸ்னாப்டீலின் தொடர்பை ஏற்படுத்தும்.
- நன்கொடையாளர்களுக்கும் நோயாளிக்கும் இடையே பொருத்தம் ஏற்பட்டால், நன்கொடையாளர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகு அவரது விவரங்கள் நோயாளியின் உறவினர்களுக்கு வழங்கப்படும்.
- பிளாஸ்மாவை (Plasma) நன்கொடையாக பெற விரும்பவர்கள், அருகிலுள்ள பிளாஸ்மா வங்கி பற்றிய தகவல்களை வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ALSO READ: கொரோனாவுக்கு மாட்டுச் சாணம் சிகிச்சை: இந்திய மருத்துவ சங்க தலைவர் எசரிக்கை!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR