மத்திய தொலைதொடர்புதுறை 10 இலக்க மொபைல் எண்களுக்கு பதிலாக 11 இலக்க எண்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொபைல் போன்களுக்கு 10 இலக்க எண்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. 10 இலக்க எண் கடந்த 2003-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு அதுமுதல் நடைமுறையில் உள்ளது. தொலைதொடர்புதுறை அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த 10 இலக்க எண்களை பராமரிக்க முடிவு செய்திருந்தது. ஆனால் மொபைல்போன் பயன்பாடு மற்றும் தொலைதொடர்பு துறையின் வளர்ச்சியால் மொபைல்போன் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் மொபைல்போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் விரைவில் சிக்கல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதனால் விரைவில் 11 இலக்க எண்களை அறிமுகப்படுத்த தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளது.