விரைவில் பேஸ்புக்கில் உணவுக ஆர்டர்!
பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியின் படி வாடிக்கையாளர்கள் பேஸ்புக் செயலியை கொண்டே உணவு வகைகளை முன்பதிவு செய்ய முடியும்.
முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியை இயக்க பேஸ்புக் வாசிகள், செயலியில் வழங்கப்பட்டுள்ள ஹைாம்பர்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உணவகங்களில் இருந்து உணவு வகைகளை டெலிவரி.காம் அல்லது ஸ்லைஸ் தளம் மூலம் ஆர்டர் செய்யலாம்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பேஸ்புக், இந்த ஆண்டின் இறுதிக்குள் 200 கோடி மாதாந்திர பயனர்களை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.