Jio Saavn-க்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமானது Spotify!
பிரபல இசை ஓலிபரப்பு வலைதளமான Spotify இந்தியாவில் தனது சேவையை ₹119-க்கு துவங்கியது!
பிரபல இசை ஓலிபரப்பு வலைதளமான Spotify இந்தியாவில் தனது சேவையை ₹119-க்கு துவங்கியது!
JioSaavn, Gaana, Amazon Music மற்றும் Airtel`s Wynk உள்ளிட்ட உள்ளூர் இசை ஒலிபரப்பு போட்டியாளர்களுக்கு மத்தியில் இன்று Spotify-யும் இந்த போட்டியில் இணைந்துள்ளது.
ஸ்வீடன் நாட்டு நிறுவனமான Spotify இந்தியாவின் 1.3 பில்லியன் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச இசை வழங்குவதாக அறிவித்துள்ளதுடன், மாதத்திற்கு 119 ரூபாய்க்கு பிரீமியம் ஸ்பீட் சந்தாக்களையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்தாண்டு ஜனவரி மாதத்தில் Spotify ஆனது இந்தியாவின் மிகப்பெரிய இசை ஒலிபரப்பாளரான T-Series உடன் ஒரு கூட்டணி ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சுமார் 160,000-க்கும் மேற்பட்ட இசைப் பாடல்களை Spotify வழங்கவுள்ளது.
Spotify இந்தியாவின் சந்தா விவரம்...
வருட சந்தா - ₹1,189
மாதாந்திர சந்தா(தொடர்ச்சியான) - ₹119
மாதாந்திர சந்தா - ₹129
ஒருநாள் சந்தா - ₹13
ஒரு வார சந்தா - ₹39
மூன்று மாத சந்தா - ₹329
ஆறு மாத சந்தா - ₹719
அறிமுக சலுகையாக ஒரு மாத ட்ரையல் சந்தாவினையும் Spotify இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.