கம்பீரமான தோற்றத்தில் குறைந்த விலையில் களமிறங்கியிருக்கும் ரெனால்ட் கிகர்
ரெனால்ட் இந்தியா நிறுவனம் அட்டகாசமான அம்சங்களுடன், குறைந்த விலையில் கம்பீரமான தோற்றத்தில் புதிய காரை களமிறக்கியுள்ளது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய Renault Kiger 2022 -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.84 லட்சம். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்தக் கார் கருப்பு நிறத்திலான டாப் ரூப்பைக் கொண்ட இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. கம்பீரமான தோற்றம் மற்றும் அசத்தல் அம்சங்களை கொண்டிருக்கும் ரெனால்ட் கிகருக்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ரெனால்ட் நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியிருக்கும் மூன்றாவது கார் சிகர். இப்போது இந்தியாவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறிய எஸ்யூவியின் டர்போ ரேஞ்சில் புதிய டெயில்கேட் மற்றும் குரோம் வேலைப்பாடு, முன்பக்கத்தில் ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் டர்போ டோர் டீக்கால்ஸ் ஆகியவை உள்ளன. இந்த காரில் 16-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் சிவப்பு வீல்கேப்களுடன் வருகின்றன.
மேலும் படிக்க | ஷாக் கொடுத்த Hero Motocorp: ஏப்ரல் 5 முதல் டூ வீலர்களின் விலைகளில் ஏற்றம்
சிறப்பு அம்சங்கள் என்ன?
2022 Renault Kiger கார் மல்டி சென்ஸ் டிரைவிங் மோடுகள் மற்றும் PM2.5 அட்வான்ஸ்டு அட்மாஸ்பியர் ஃபில்டரை உள்ளடக்கிய சமீபத்திய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வயர்லெஸ் சார்ஜிங், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 60/40 ஸ்பிலிட் ரியர் சீட் உடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் உள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, Renault Kiger மாடல் குறைந்த விலை மற்றும் சிறந்த அம்சங்கள் காரணமாக மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது.
என்ஜின் அமைப்பு
புதிய ரெனால்ட் சிகர் இரண்டு எஞ்சின் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது. 1.0-லிட்டர் எனர்ஜி எஞ்சின் மேனுவல் மற்றும் ஈஸி-ஆர் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற எஞ்சின் விருப்பம் மேனுவல் மற்றும் எக்ஸ்-டிரானிக் சிவிடி டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலில் இந்த கார் 20 kmpl மைலேஜுக்கு மேல் கொடுக்கிறது. மேலும், Global NCAP பாதுகாப்புக்காக 4-நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இதனுடன், 2 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள், சென்சிங் டோர் அன்லாக் மற்றும் ஸ்பீட் சென்சிங் டோர் லாக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | சந்தையை கலக்க வருகிறது ரூ.10,000-க்கும் குறைவான அசத்தல் போன்: கசிந்த விவரங்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR