Tata Tigor EV: அட்டகாசமாக அறிமுகம் ஆன இந்த மின்சார காரின் முழு விவரங்கள் இதோ
டாடா மோட்டார்ஸ் தனது புதிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார் Tata Tigor EV-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் புதிய ஜிப்டிரான் தொழில்நுட்பத்துடன் இந்த வாகனத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் தனது புதிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார் Tata Tigor EV-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் புதிய ஜிப்டிரான் தொழில்நுட்பத்துடன் இந்த வாகனத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் Tata Tigor EV-ஐ மூன்று வகைகளில் அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ .11.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்களும் இந்த வாகனத்தை முன்பதிவு செய்ய விரும்பினால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வெறும் ரூ. 21,000 செலுத்தி இதை முன்பதிவு செய்யலாம். Tata Tigor EV-யின் விலை மற்றும் அதன் அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இதுதான் விலை
Tata Tigor EV-யின் விலை ரூ .11.99 லட்சத்தில் தொடங்குகிறது. அதன் XM வேரியண்டின் விலை ரூ .12 லட்சத்து 49 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, காரின் XZ + வகைக்கு 12 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. டாடா டிகோர் ஈவியின் டூயல் டோன் நிறத்தின் விலை ரூ .13 லட்சத்து 14 ஆயிரமாகும்.
Tata Tigor EV-யின் அம்சங்கள்:
புதிய டிகோர் ஈவி (Tata Tigor EV), 2020 ஆம் ஆண்டில் டாடா அறிமுகப்படுத்திய பெட்ரோல் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அடிப்படையாகக் கொண்டது. இதன் வடிவமைப்பு பெட்ரோல் மாடலைப் போன்றது. நிறுவனம் பாரம்பரிய கிரில்லை புதிய பளபளப்பான கருப்பு பேனலுடன் மாற்றியுள்ளது. இதனால், செட்-அப் ஹைலைட் ஆவதுடன், எலக்ட்ரிக் ப்ளூ ஆக்சண்டும் உள்ளது. இதில் ஹெட்லேம்ப்புகள் மற்றும் 15 இன்ச் அலாய் வீல்களுக்குள் நீல நிற ஹைலைட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ALSO READ: Top 7 Mid Size SUV: உங்கள் பட்ஜெட்டுக்குள் கச்சிதமாய் பொருந்தும் அட்டகாசமான கார்கள்!!
Tata Tigor EV-யின் பவர்:
தற்போதைய மாடலை விட டாடா டிகோர் ஈவி ஓட்டுவதில் சிறந்ததாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இது IP67 26 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் 73.75 hp சக்தியும் 170 Nm பீக் டார்க்கும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது தவிர, காரின் பேட்டரி மற்றும் மோட்டருக்கு எட்டு வருடங்கள் மற்றும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கி.மீ. -க்கான உத்தரவாதமும் கிடைக்கிறது. டைகோர் வெறும் 5.7 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்டும்.
பாதுகாப்பு அம்சங்கள்:
NCAP க்ராஷ் சோதனையில் டாடா டிகோர் EV 4 நட்சத்திர மதிப்பீடுகளை பெற்றுள்ளது. இந்த செடான் காரில் நிறுவனம் 2 ஏர்பேக்குகளை கொடுத்துள்ளது. என்சிஏபி கிராஷ் டெஸ்டில் ஒரு கார் எவ்வளவு நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுகிறதோ, அந்த அளவிற்கு அந்த கார் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
காரின் வரம்பு இதுதான்
Tata Tigor EV-யில் நிறுவனம் இரண்டு ஓட்டுநர் முறைகளை வழங்கியுள்ளது. இதில் டிரைவ் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் ஆகியவை அடங்கும். குறைந்த எதிர்ப்பு கொண்ட டயர்கள் மூலம் ஓட்டுநர் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்குவதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்த மின்சார காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 306 கிமீ வரை இயக்க முடியும். இருப்பினும், இந்த ஓட்டுநர் வரம்பு சாலை போக்குவரத்து, நிலை மற்றும் நீங்கள் அதை எப்படி ஓட்டுகிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது.
Hyundai Kona Electric உடன் போட்டி
டாடா டிகோர் இவி ஹூண்டாய் கோனாவுடன் (Hyundai Kona Electric ) சந்தையில் போட்டியிடும். இது 39.2 கிலோவாட் சக்தி வாய்ந்த பேட்டரியைக் கொண்டுள்ளது. இது மற்ற கார்களை விட மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரை சுமார் 7 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த கார் 450 கிமீக்கு மேல் பயணிக்ககும் திறன் கொண்டது. இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் 23.79 லட்சம் ஆகும்.
ALSO READ: மகிந்திராவின் Mahindra XUV 700 விரைவில் அதிரடி அறிமுகம்: முக்கிய அம்சங்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR