Tata Tigor CNG EMI Calculator: டாடா மோட்டார்ஸ் தற்போது நாட்டில் மூன்றாவது பெரிய கார் விற்பனை நிறுவனமாக உள்ளது. நிறுவனம் ஹேட்ச்பேக் முதல் எஸ்யூவி வரை பல மாடல்களைக் கொண்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் ஒரு செடான் காரையும் டாடா டிகோர் என்ற பெயரில் விற்பனை செய்கிறது. இந்த செடான் சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கிறது என்பது இதன் சிறப்பம்சமாகும். இதில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் (86PS/113Nm) கிடைக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த எஞ்சின் சிஎன்ஜி கிட் மூலம் 73PS மற்றும் 95Nm ஐ உருவாக்குகிறது. டாப் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், கீலெஸ் என்ட்ரி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களை இது கொண்டுள்ளது. இந்த அற்புதமான வாகனத்தை வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த செடானின் சிஎன்ஜி வெர்ஷனை வெறும் ரூ.86,000-க்கு ஒருவர் சொந்தமாக்கிக்கொள்ளலாம். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம். 


Tata Tigor CNG: விலை


டாடா டிகோர் சிஎன்ஜி மூன்று வகைகளில் விற்கப்படுகிறது - XM, XZ மற்றும் XZ+. இதன் விலை ரூ.7.60 லட்சத்தில் தொடங்கி ரூ.8.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. இந்த காரை நீங்கள் கடனில் வாங்க விரும்பினால், 86 ஆயிரம் ரூபாய் செலுத்தி இதை சொந்தமாக்கிக் கொள்ளலாம். அதன் இஎம்ஐ-ன் முழுமையான கணக்கீட்டை இங்கே தெரிந்துகொள்ளலாம். 


மேலும் படிக்க | Mahindra Thar: சொகுசுக் கார்களில் விலை குறைவானது எது? மஹிந்திரா தார் எஸ்யூவி?


Tata Tigor CNG: EMI கால்குலேட்டர்


காரின் அடிப்படை மாறுபாட்டை (எக்ஸ்எம் சிஎன்ஜி) வாங்க விரும்பினால், இதன் ஆன் ரோட் விலை ரூ.8.56 லட்சம் ஆகும். இப்போது இந்த மாறுபாட்டை நீங்கள் கடனில் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் விருப்பத்திற்கேற்ப கூடுதல் முன்பணத்தை (டவுன் பேமெண்ட்) கொடுக்கலாம். வெவ்வேறு வங்கிகளில் வட்டி விகிதம் வேறுபட்டிருக்கும். கடன் காலம் 1 முதல் 7 ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்படலாம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.


உதாரணமாக, முன்பணமாக ரூ.86 ஆயிரம் (10%), வட்டி விகிதம் 10% மற்றும் கடன் காலம் 5 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.16,363 இஎம்ஐ செலுத்த வேண்டும். மொத்த கடன் தொகைக்கு (ரூ.7.70 லட்சம்) கூடுதலாக ரூ.2.11 லட்சத்தை செலுத்துவீர்கள்.


மேலும் படிக்க | சலுகை விலையில் பெட்ரோல்! IOC - Kotak மஹிந்திராவின் எரிபொருள் கிரெடிட் கார்டு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ