வாட்ஸ்அப் நேற்று தன் தளத்தில் ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டது. நிறுவனம் உலகளவில் தனது தளத்தில் ‘Carts’ என்ற அம்சத்தை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு Whatsapp தளத்தைப் பயன்படுத்தி எளிதாக ஷாப்பிங் செய்ய முடியும். இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் ஒரு பட்டியலை ப்ரௌஸ் செய்து, பல பொருட்களைத் தேர்வு செய்து, ஒரு மெசேஜாக (Whatsapp Message) ஆர்டர் செய்யலாம்.


அதே நேரத்தில், வணிக நிறுவனங்களும் இந்த அம்சம் மூலம் வாடைக்கையாளர்களிடம் இருந்து வரும் ஆர்டர்களை எளிதாக டிராக் செய்து, நிர்வகித்து பொருட்களை விற்பனை செய்யலாம்.


Whatsapp Cart-ல் பொருட்களை சேர்த்து, எடிட் செய்து வணிக நிறுவனத்துடன் எவ்வாறு ஷாப் செய்வது என்பதை இங்கே காணலாம்:


Step 1: Whatsapp-ஐ ஓப்பன் செய்யவும்.


Step 2: உங்கள் chat அல்லது business profile-க்குச் செல்லுங்கள்.


Step 3: Shopping button icon-ஐ டேப் செய்யவும். இது வணிக நிறுவனங்களின் பெயர்களுக்கு அருகில் இருக்கும். இவ்வகையில் அவர்களது கேட்டலாகை நீங்கள் அணுக முடியும்.


Step 4: கேட்டலாக் திறந்தவுடன், நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பும் பிராடெக்டுகளை ப்ரௌஸ் செய்யவும்.


Step 5: உங்களுக்கு பிடித்த பிராடெக்டில் டேப் செய்யவும்.


Step 6: நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பினால், ‘Add to Cart’-ஐ டேப் செய்யவும்.


Step 7: நீங்கள் உங்கள் cart-ஐ அப்டேட் செய்தவுடன், அதை விற்பனையாளருக்கு whatsapp செய்தியாக அனுப்பவும்.


Step 8: இதை நீங்கள் அனுப்பியவுடன், விற்பனையாளருடனான உங்களது சேட் விண்டோவில், ‘view cart’-ஐ டேப் செய்து உங்கள் ஆர்டரின் விவரங்களைப் பார்க்கலாம்.


ALSO READ: Tech News: YouTube-ல் இனி கீழ்த்தரமான பின்னூட்டம் அளித்தால் pop-up மூலம் warning கிடைக்கும்


உங்கள் ஆர்டரைத் திருத்த இந்த வழியைப் பின்பற்றவும்:


Step 1: ‘View Cart’-ஐ டேப் செய்து உங்கள் cart-ல் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பிராடெக்டுகளையும் காணலாம்.


Step 2: கேட்டலாகிற்கு திரும்பிச் சென்று இன்னும் அதிகமான பொருட்களை சேர்க்க, ‘Add More’-ஐ டேப் செய்யவும்.


Step 3: உங்கள் cart-ல் நீங்கள் சேர்த்துள்ள பிராடெக்டுகளின் அளவையும் (quantity) நீங்கள் மாற்றலாம்.


Whatsapp அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதியால், பயனர்களுக்கு ஒரு புதிய மற்றும் எளிய ஷாப்பிங் அனுபவம் கிடைக்கும் என நிறுவனம் நம்புகிறது. முடிந்தவரை வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி அவர்களுக்கு புதிய ஷாப்பிங் (Shopping) அனுபவத்தையும் வணிகர்களுக்கு புதுமையான வர்த்தக முறையையும் வழங்க வேண்டும் என்பதே whatsapp-ன் இந்த புதிய அம்சத்தின் நோக்கமாகும்.


ALSO READ: இந்தியாவில் Jio 5G Service எப்பொழுது? முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR