நாள் முழுவதும் AC இயக்கினாலும் மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க இதை பொருத்தவும்
கோடை காலத்தில் ஏசி இல்லாமல் இருப்பது மிகவும் கடினம், ஆனால் நால் முழுவதும் ஏசியை இயக்குவதால் மின் கட்டணம் அதிகரிக்கிறது. இந்த பிரச்சனைக்கு எங்களிடம் ஒரு தீர்வு உள்ளது
சுட்டெரிக்கும் வெயிலும், கொளுத்தும் வெயிலும் உள்ள இந்த சீசனில் வீட்டை விட்டு வெளியே வருவதே சிரமம். ஏசி இல்லாமல் இருப்பதும் மிகவும் கடினம். ஆனால் நாள் முழுவதும் ஏசி இயங்குவதால் மாத இறுதியில் அதிக மின் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
வெப்பத்தில் இருந்து தப்பிக்க டென்ஷன் இல்லாமல் ஏசியை இயக்குவதற்கும், மின்சாரக் கட்டணம் அதிகம் வரமால் இருப்பதற்கும், ஒரு அற்புதமான சாதனம் உள்ளது. நாள் முழுவதும் ஏசியை இயக்கிய பிறகும் உங்கள் மின் கட்டணம் குறைவாகவே வரும். அத்தகைய சாதனத்தை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்.
மின் கட்டணத்தைச் சேமிக்கும் சாதனம்
ஏசி பவர் சேவர் சாதனத்தைப் பயன்படுத்தி உங்கள் மின்சார கட்டணத்தை எளிதாகக் குறைக்கலாம், மேலும் நீங்கள் ஏசியை இடைவிடாது இயக்க வேண்டியதில்லை. இது உங்கள் ஏசியில் பொருத்தக்கூடிய சாதனம். இது மின்சாரத்தை சேமிக்க பெரிதும் உதவும்.
ஏசி பவர் சேவர் சாதனத்தின் விலை
முதலில், மின்சாரத்தை சேமிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய Proelectra MDP08 சாதனத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். 1KW திறன் கொண்ட இந்த மின் சேமிப்பு சாதனத்தை வீடு மற்றும் அலுவலகம் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அமேசானில் இதன் விலை ரூ.2200 ஆனால் 61 சதவீதம் தள்ளுபடிக்கு பிறகு ரூ.850க்கு விற்கப்படுகிறது. அதை உங்கள் ஏசியில் பொருத்தினால் போதும், டென்ஷன் இல்லாமல் ஏசியை நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | Hidden Camera: பெண்களை மிரட்டும் ரகசிய கேமிரா; கண்டுபிடிப்பது எப்படி
டைனமிக் ஏசி பவர் சேவர்
டைனமிக் ஏசி பவர் சேவர் என்ற மெற்றொரு சாதனத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம். இது ஒரு முழு தானியங்கி ஏசி பவர் சேவர் சாதனம். இதை நீங்கள் ஒரு பொறியாளரின் உதவியுடன் உங்கள் ஏசியில் நிறுவ வேண்டும். இந்த சாதனத்தை நிறுவுவதன் மூலம், உங்கள் வீட்டின் மின்சாரக் கட்டணத்தில் 10% முதல் 40% வரை குறைவதைக் காணலாம். மற்ற சாதனங்களுடன் ஒப்பிடும்போது இது விலை அதிகம். நீங்கள் இதை ரூ.7800க்கு வாங்கலாம்.
மேலும் படிக்க | கோடையில் ஏசியை டென்ஷன் இல்லாமல் பயன்படுத்த சில ‘மின் சேமிப்பு’ டிப்ஸ்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR