Tecno Pova 4 கடந்த வாரம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் ஆனது. இந்தியாவில் இதன் முதல் விற்பனை நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த போன் அமேசான் மற்றும் ஜியோமார்ட் ஆகியவற்றிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போன் Helio G99 பிராசஸர், 6000mAh பெரிய பேட்டரி மற்றும் 50MP கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. டெக்னோ போவா 4 இன் எம்ஆர்பி ரூ. 14,499 ஆகும். எனினும், இந்த போனை அமேசானில் மிக மலிவான விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் மிக ஸ்டைலான ஸ்மார்ட்போன் ஆகும். இது நவநாகரீக தோற்றத்தில் உள்ளது. Tecno Pova 4 இன் அம்சங்கள், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Tecno Pova 4 சலுகைகள் & தள்ளுபடிகள்


Tecno Pova 4 அமேசான் இந்தியாவில் ரூ.11,999க்கு கிடைக்கிறது. எச்டிஎஃப்சி வங்கி அட்டை மூலம் இந்த போனை வாங்கினால், 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்த போன் ரூ.10,999க்கு கிடைக்கும். அதன் பிறகு இந்த ரூ.10,650 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள்  பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெறலாம். எனினும் இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன் நல்ல நிலையிலும் லேட்டஸ்ட் மாடலாகவும் இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | 5G மொபைல் திடீர் விலை குறைப்பு! சாம்சங்க் போட்ட மாஸ் ஸ்கெட்சில் சிக்கிய நிறுவனங்கள்


இந்த அனைத்து சலுகைகளையும் நீங்கள் பெற முடிந்தால், இந்த போனின் விலை விலை ரூ.349 ஆக குறைந்துவிடும். இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. சிரோலைட் ப்ளூ மற்றும் யுரேனோலித் கிரே என இரு வண்ணங்களில் வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்க முடியும். 


Tecno Pova 4 விவரக்குறிப்புகள்


டெக்னோ போவா 4 ஆனது 6.8 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 12 OS இல் இயங்குகிறது. இது HiOS 12.0 உடன் ஓவர்லோட் செய்யப்பட்டுள்ளது. போனில் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு உள்ளது. ஆனால் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் சேமிப்பகத்தை அதிகரிக்கலாம். தொலைபேசியில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh வலுவான பேட்டரி உள்ளது. இது தவிர, போனில் 10W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவும் உள்ளது.


டெக்னோ போவா 4 கேமரா


Tecno Pova 4 இல் இரட்டை கேமரா அமைப்பு கிடைக்கிறது. இதில் 50MP ப்ரைமரி லென்ஸ் மற்றும் இரண்டாவது AI லென்ஸ்கள் உள்ளன. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது. இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர்கள், பக்கவாட்டு கைரேகை ஸ்கேனர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பல அம்சங்கள் போனில் உள்ளன.


மேலும் படிக்க | Jio Phone 5G: விரைவில் வருகிறது போன்களின் பாஸ்!! விலையோ மலிவு, அம்சங்கள் மாஸ்!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ