வாட்ஸ்அப் செயலியில் ஒருவருக்கு அனுப்பிய குறுந்தகவலை திரும்பப்பெறுவது அல்லது நிரந்தரமாக அழிக்கும் வசதி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு சமீபத்தில் இந்த வசதி வழங்கப்பட்டது. இதன் மூலம் அனுப்பிய குறுந்தகவல்களை, ஏழு நிமிடங்களுக்குள் அழிக்க வேண்டும் என வாட்ஸ்அப் சார்பில் கூறப்பட்டிருந்தது


அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் ஒருவர் மற்றொருவருக்கு அனுப்பிய குறுந்தகவல்களை அழித்தாலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் நோட்டிபிகேஷன் ஹிஸ்ட்ரி  (Notification History) எனும் செயலியை கொண்டு இதனை மிக எளிமையாக இயக்க முடியும் என்றும், ஸ்பெயின் நாட்டு ஆண்ட்ராய்டு வலைபக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.