ஆண்டிராய்டு செல்போன்களுக்கு பாதுகாப்பான செயலிகளை கொடுக்கும் கூகுள் பிளே ஸ்டோரில், சில ஆபத்தான செயலிகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால், உடனடியாக இந்த செயலியை மொபைலில் இருந்து நீக்கிவிடுங்கள். இல்லையெனில் உங்களின் ஆன்லைன் பேங்கிங்கை டிராக்கிங் செய்து உங்கள் வங்கிக் கணக்கையும் காலி செய்துவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிளிப்கார்ட் விற்பனை! 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை 17 ஆயிரத்தில் வாங்கலாம்


அந்த செயலியின் பெயர் Xenomorph ஆப். இந்த செயலி மொபைலில் இருக்கும் தேவையற்ற பைல்களை நீக்கி, ஸ்பேஸ் அதிகரிக்க உதவும். சில பைல்கள் அல்லது லிங்குள் போனில் இருக்கும் இடத்தை ஆக்கிரமித்திருந்தால், ஜெனோமார்ப் செயலி, அவற்றை சரியாக அடையாளம் கண்டு நொடிப்பொழுதில் நீக்கிவிடும். இதன் மூலம் உங்கள் போனில் அதிகப்படியான காலி இடம் கிடைக்கும் 


ஆனால், இந்த செயலி தான் ஐரோப்பாவில் ஏற்படும் வங்கி மோசடிகளுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜெனோமார்ப் செயலிகளில் ட்ரோஜன் இருப்பதை கண்டுபிடித்துள்ள நிபுணர்கள், ஆன்டிராய்டு மால்வேர் சாப்ட்வேர் என வகைப்படுத்தியுள்ளனர். இந்த மால்வேர் மிகவும் ஆபத்தானது. இது பயனர்களின் தரவை தீய வழியில் ஹேக் செய்கிறது. ஆன்லைன் பேங்கிங் ஆப்ஸின் பாஸ்வேர்டு ஐடிகளையும் முறைகேடாக சேகரித்துக் கொள்ளும். ஒரே ஒருமுறை ஜெனோமார்ப் செயலியை பதிவிறக்கம் செய்துவிட்டால், அப்போது இருந்து ​​உங்கள் ஃபோன் மற்றும் மானிட்டரின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கண்காணிக்கத் தொடங்கும். 


மேலும் படிக்க | Flipkart Sale, வெறும் ரூ.764க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்கலாம்


இதன்மூலம் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களைக் கொண்டு டெக் மோசடியாளர்கள் வங்கி மோசடியை அரங்கேற்றுகின்றனர் என்று Threat Fabric அறிக்கை கூறுகிறது. சைபர் நிபுணர்களின் கொடுத்திருக்கும் தகவல்களின்படி, 50,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G