டிக்டாக் செயலிக்கு உலகம் முழுவதும் அமோக வரவேற்பு உள்ளது. இந்தியாவில் குறுகிய காலத்தில் அசுர வளர்சியடைந்த டிக்டாக், பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. ஆனால், உலகம் முழுவதும் பொழுதுபோக்கு செயலிகளில் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில்கூட இந்த செயலியை தடை செய்தபோது, அந்த தடையை நீக்க வேண்டும் என அதன் தீவிர யூசர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்தளவுக்கு பாப்புலர் செயலியாக இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் பிரபலமாக இருக்கும் டிக்டாக், அடுத்த துறையை டார்கெட் செய்துள்ளது. இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் கேமிங் துறையில் களமிறங்க இருக்கிறதாம். கொரோனா வைரஸ் வந்தபிறகு வீட்டில் இருந்த மக்கள், பொழுது போக்கிற்காக கேமிங் விளையாடத் தொடங்கினர். இதனால் கேமிங் துறை அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. 


மேலும் படிக்க | OPPO ஸ்மார்ட்போனில் பம்பர் உடனடி தள்ளுபடிகள் அறிவிப்பு


நாள்தோறும் புதுப்புது கேம்ங்கள் மார்க்கெட்டில் வந்து கொண்டே இருக்கின்றன. இதனை கவனித்த டிக்டாக் நிறுவனம், இதிலும் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் கேமிங்கை வெளியிட டிக்டாக் திட்டமிட்டுள்ளது. அதற்கான சோதனை முயற்சியாக வியட்நாமை டிக்டாக் தேர்ந்தெடுத்துள்ளது. ஏனென்றால்,அந்நாட்டில் இருக்கும் 75 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் தொழில்நுட்ப ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர். ஆய்வில் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.


கூகுள், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை ஏற்கனவே குறிவைத்து தங்களின் தொழில்நுட்பங்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளனர். அவர்களின் ஃபார்முலாவை கேமிங் மார்க்கெட்டுக்கு டிக்டாக் பயன்படுத்த உள்ளது. 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் முதல் காலாண்டில் உலகம் முழுவதும் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் 175 மில்லியன்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்த செயலியைத் தொடர்ந்து வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய செயலிகள் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் சுமார் 19 மில்லியன் பதிவிறக்கங்களை பெற்றுள்ளது டிக்டாக். நடப்பு ஆண்டில் அந்த நாட்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாகவும் உள்ளது. 


மேலும் படிக்க | உங்களை உளவு பார்க்கும் 7 செயலிகள்! உடனே டெலிட் செய்யுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR