Smartphones Tips: எலெக்ட்ரானிக் பொருள்களை பயன்படுத்தினால் அது வெப்பத்தில் சூடாவது இயல்புதான். இருப்பினும், அதுவும் ஓரளவுக்குதான். எலெக்ட்ரானிக் பொருள்களான லேப்டாப், PC, ஸ்மார்ட்போன் ஆகியவை அதிகமாக சூடாவதை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதிகம் சூடாவதை உடனடியாக கண்டடைந்து, அதுகுறித்து பிரச்னையை சரிசெய்யாவிட்டால் அந்த சாதனமே மொத்தமாக பிரச்னையாகிவிடும் எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், ஸ்மார்ட்போன் இந்த கோடை காலத்தில் அளவுக்கு அதிகமாக சூடாகினால் என்ன செய்ய வேண்டும், மொபைல் ஏன் அதிகமாக சூடாகிறது, அதன் பின்னணியில் உள்ள தகவல்களை தெரிந்துகொள்வதன் மூலம் அதனை நீங்கள் எதிர்காலத்திலும் தவிர்க்கலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 


ஏப்ரல், மே மாத கோடைக்காலம் ஓய்ந்தாலும், ஜூன் மாதத்திலும் வெக்கை மற்றும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும் எனலாம். தற்போது சில பகுதிகளில் 45 - 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகிறது. மனிதர்களே இந்த வெயிலில் வெளியே வர அச்சப்படுகின்றனர், இந்த வெயிலில் வாடி வதங்கி கருவாடாகிவிடுவோமோ என அச்சம் வருகிறது. அப்படி வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில், பல ஸ்மார்ட்போன்களும் முறையாக செயல்படுவதில்லை. குறிப்பாக, ஸ்மார்ட்போன்கள் அதிகம் சூடானால் பிரச்னை பெரிதாகும்.


மேலும் படிக்க | ஜூன் மாதத்தில் சந்தைக்கு வரும் ஸ்மார்ட்போன்கள்... OnePlus முதல் Vivo வரை - அனைத்தும் தரம்!


சார்ஜ் ஏற்றும்போது கூட மொபைல் சூடாகலாம். மொபைல் சூடாவது அதற்கு நல்லது கிடையாது, உங்களுக்கும் நல்லது கிடையாது. அந்த நேரத்தில் உங்களின் மொபைல் தீப்பிடிக்காமல் இருக்கவும், கோளாறு ஆகாமல் இருக்கவும் சில விஷயங்களை கடைபிடிக்கலாம். இந்த டிப்ஸ்களை பின்பற்றும்பட்சத்தில் 45-50 டிகிரி செல்ஷியஸில் வெப்பம் வந்தாலும் மொபைலுக்கு ஒன்றும் ஆகாது. 


பேசுவதை குறையுங்கள்


கோடை காலத்தில் மொபைல்களில் பேசுவதை குறைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, பேசும்போது ஸ்பீக்கரில் போட்டு பேசுவதை பலரும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது சற்று அபாயமாகும். எனவே, அவசியமின்றி போனில் பேசாதீர்கள். 


பேட்டரியில் கவனம்


எப்போதும் பேட்டரி சதவீதத்தை 30 விழுக்காடு கீழ் கொண்டு வராதீர்கள். அப்படி பேட்டரி 30 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தால் மொபைல் சூடாகும். பாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் கொண்ட மொபைல்களிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக, சார்ஜ் ஏறும் போது மொபைலை பயன்படுத்தாதீர்கள். மேலும் எப்போதும் சரியான தரத்திலான சார்ஜரை பயன்படுத்தவும். 


குறைவான பிரைட்னஸ்


ஸ்மார்ட்போனில் குறைவான பிரைட்னஸ் கொண்டே பயன்படுத்துங்கள். ஆட்டோ பிரைட்னஸை வைத்து மொபைலை பயன்படுத்துங்கள். அதில் பிரைட்னஸ் அதிகமாகது.


வெப்பமான இடத்தில் மொபைலை வைக்காதீர்கள்


GPS, Wi-Fi, மொபைல் டேட்டா ஆகியவை பயணத்தின் போது உபயோகமாகும். இவை அனைத்தும் பயன்பாட்டில் இருந்தால் மொபைல் சூடாகும். மேலும் மொபைலை சூரிய வெளிச்சம்படும் வகையில் வைக்காதீர்கள். காரில் செல்லும்போது காற்று வரும் பகுதியில் வைக்கவும். பைக் ஓட்டும்போது மொபைலை சட்டைப்பையில் வைக்காதீர்கள். அதற்கு பதில் தனி பேக்கில் வைத்து செல்லவும்.


மேலும் படிக்க | ரூ. 7 ஆயிரத்திற்கும் குறைவாக ஸ்மார்ட்போன் வேணுமா... இதோ பெரிய லிஸ்ட்டே இருக்கு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ