பனியில் பாதுகாப்பாக கார் ஒட்ட சூப்பரான 5 டிப்ஸ்
பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகனங்களை நிறுத்துவதே விபத்துக்கு முக்கிய காரணமாகும்.
பனிக்காலம் வந்துவிட்டது. இந்த சீசனில் மூடுபனி காரணமாக வாகனம் ஓட்டுவதில் பெரும் சிக்கல் ஏற்படுவது வழக்கம். காலை, மாலை, இரவு நேரங்களில் பனி மூட்டத்தில் கார், பைக்கில் சாலைகளில் செல்லும்போது எதிரில், அருகில் வரும் வாகனங்களை காண்பது மிகவும் சிரமமாக இருக்கும்.
அத்தகைய சூழ்நிலையில், வாகனம் ஓட்டுபவர்களுக்கு (Vehicle Drivers) பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனத்தை மிக மெதுவாக ஓட்டுவதுதான் இந்த நேரத்தில் புத்திசாலித்தனமான விஷயமாக இருக்கும். பனி மூட்டத்தால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான விபத்துகள் நடப்பதுடன், இந்த விபத்துகளில் பலர் உயிரிழக்கின்றனர்.
அடர்ந்த பனிமூட்டம் காரணமாக கார், பைக்கை ஓட்ட முடியாமல் நிறுத்தும் நிலையும் ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பனிமூட்டத்தில் வாகனம் ஓட்டும்போது உங்களை பாதுகாத்துக்கொள்ள உதவும் 5 டிப்சை இந்த பதிவில் காணலாம்.
1. மெதுவாக ஓட்டவும்
அடர்ந்த மூடுபனியில் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. ஒரு நபரோ, வாகனமோ, விலங்குகளோ, ஏதேனும் திடீரென உங்கள் எதிரில் வரும்போது, சரியாக பிரேக் அடிக்க கூட வாய்ப்பு கிடைக்காமல், விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக அதிகரிக்கின்றன. எனவே மூடுபனி முடியும் வரை வாகனத்தின் வேகத்தை குறைவாக வைத்திருப்பது நல்லது.
2. ஹெட்லைட் அவசியம்
முன்பக்கம் தெரியும் காட்சி தெளிவாக இல்லை என்றால், ஹெட்லைட்களை ஆனிலேயே வைத்திருங்கள். அதை குறைந்த பீமில் (low beam) இயக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வழக்கமாக வாகனங்களை ஓட்டும்போது ஓட்டுனர்கள் ஹைபீமை பயன்படுத்துவதுவார்கள். இதனால் தெளிவுத்திறன் மோசமாகப் பாதிக்கப்படுகின்றது. ஏனெனில் ஹைபீமிலிருந்து வரும் ஒளி மூடுபனியின் மீது விழுந்து அது அது மூடுபனியை வலிமையாக்குகிறது. எனவே லோ-பீமில் ஒளியில் வாகனத்தை இயக்குவது அவசியம்.
ALSO READ:கார் வாங்கணுமா? அசத்தலான மைலேஜுடன் பட்ஜெட்டுக்குள் வரும் 5 டாப் கார்கள்
3. ஃபாக் லைட்களின் பயன்பாடு
உங்கள் காரின் (Car) முன் பகுதியில் ஃபாக்லைட்கள் பொருத்தப்பட்டிருந்தால், மூடுபனியில் வாகனம் ஓட்டுவது உங்களுக்கு சற்று எளிதாக இருக்கும். இதன் உதவியுடன், டிரைவரால் சாலையை மூடுபனியிலும் தெளிவாக பார்க்க முடியும். இதனால் முன்னால் உள்ள வாகனம் மற்றும் அனைத்தையும் எளிதில் அடையாளம் காண முடியும்.
4. சாலையின் வெள்ளைப் பட்டையின் உதவியை எடுத்துக் கொள்ளுங்கள்
சாலையில் உள்ள வெள்ளைக் கீற்று, அடர்ந்த மூடுபனியில் காரை ஓட்டுவதற்குப் பெரும் துணையாக இருக்கிறது. ஆனால் இங்கு சாலையின் நடுவில் உள்ள கீற்றுத் துண்டுகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை. அப்படி செய்தால், உங்கள் வாகனம் சாலையின் நடுவில் நகரத் தொடங்குகிறது. இது ஆபத்தானது. அத்தகைய சூழ்நிலையில், சாலையின் இடதுபுறத்தில் உள்ள வெள்ளை துண்டுகளைப் பின்பற்றவும். இது உங்களை சாலையில் சரியான இடத்தில் வைத்திருப்பதோடு விபத்துகளைத் தவிர்க்கவும் உதவும்.
5. சாலையில் வாகனத்தை நிறுத்த வேண்டாம்
பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகனங்களை நிறுத்துவதே விபத்துக்கு முக்கிய காரணமாகும். பின்னால் வரும் வாகனங்கள், சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனத்தை பார்க்க முடியாமல், சரியான நேரத்தில் பிரேக் போடாமல், நிற்கும் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே மூடுபனியில் உங்களால் முன்னால் உள்ள சாலையைக் கடக்க முடியாவிட்டால், உங்கள் வாகனத்தை சாலையில் இருந்து தள்ளி, பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவது நல்லது.
ALSO READ:Best Bikes: மிகச்சிறந்த மைலேஜ் அளிக்கும் இந்தியாவின் டாப் பைக்குகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR