பேட்டரியில் லைஃப் கொடுக்கும் பெஸ்ட் 5 ஸ்மார்ட்போன்கள்
6000mAh சக்தி வாய்ந்த பேட்டரி கொண்ட பெஸ்ட் 5 ஸ்மார்ட்போன்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் வாங்கும்போது பேட்டரி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தான் வாடிக்கையாளர்கள் முதன்மையாக பார்ப்பார்கள். குறைந்தபட்சம் ஒரு நாளைக்காவது பேட்டரி நீடிக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்கள் விருப்பம். அத்தகைய ஸ்மார்ட்போன்களையே வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்குவார்கள். பல நிறுவனங்களும் அதிக லைஃப் கொண்ட பேட்டரியை அறிமுகப்படுத்தினாலும், அவற்றில் பெஸ்ட் மற்றும் விலை மலிவான பேட்டரி கொண்ட போன்கள் என்பதை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங்க் கேலக்ஸி M32
சாம்சங்க் கேலக்ஸி M32 6000mAh பேட்டரியுடன் வருகிறது. நீங்கள் இந்த போனை வாங்கப் போகிறீர்கள் என்றால், உங்களுடைய சாய்ஸ் சிறந்ததுதான். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொபைலில் 1TB SD கார்டையும் பொருத்திக் கொள்ளலாம். பின்புறம் நான்கு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமரா 64 எம்.பியை கொண்டிருக்கும்
ரியல்மீ நஸ்ரோ 30A
ரியல்மீ நஸ்ரோ 30A - ஸ்மார்டபோன் பெஸ்ட் டிஸ்பிளேவுடன் வரும். இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளன. முதன்மையானது 13 மெகாபிக்சல்கள் மற்றும் இரண்டாம் நிலை 2 மெகாபிக்சல்களை கொண்டிருக்கும். மேலும், இதில் 6000mAh பேட்டரி உள்ளது. கேமரா தரத்தில் நீங்கள் சமரசம் செய்ய முடிந்தால், இந்த ஃபோனைப் பெறலாம். 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் ரூ.9,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | பிளிப்கார்ட்டில் அசத்தலான டீல்; வெறும் ரூ.749 விலை Redmi 5G ஸ்மார்ட்போன்
இன்பினிக்ஸ் ஹாட் 10 Play
6000mAh பேட்டரியை கொண்ட போன்களில் இதுவும் ஒன்று. 6.82 இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும். இதன் விலை ரூ.8,299.
மேலும் படிக்க |
மோட்டோரோலா ஜி10 பவர்
மோட்டோரோலா ஜி10 பவர் 6.51 இன்ச் திரையுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி உள்ளது. பின்பக்க கேமராவில் முதன்மையானது 48 மெகாபிக்சல்களையும், இரண்டாவது 8 மெகாபிக்சல்களையும் கொண்டிருக்கும்.4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு கொண்ட இந்த போனை ரூ.10,499-க்கு பெறலாம்.
ஜியோனி மேக்ஸ் புரோ
உங்கள் பட்ஜெட் 7000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், நல்ல பேட்டரியுடன் கூடிய போன் வாங்க விரும்பினால், இந்த போன் நல்ல சாய்ஸ். போனில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. 6000mAh பேட்டரியுடன், 6.52 இன்ச் HD + டிஸ்ப்ளே கொண்டுள்ளது. போனின் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன. முதன்மையானது 13 மற்றும் இரண்டாம் நிலை 2MP ஆகும். செல்ஃபி கேமரா 8 மெகாபிக்சல்களில் வழங்கப்படுகிறது. இந்த போனை ரூ.6,999-க்கு வாங்கலாம்.
மேலும் படிக்க | ஹேக்கிங் முறையாக கற்றுக் கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR