ஸ்பெஷல் தினங்களில் கிரீட்டிங் கார்டுகள் அல்லது பூங்கொத்துகள் போன்றவற்றை பரிசாக கொடுப்பது அழகாக தெரிந்தாலும், கேட்ஜெட்டுகளை பரிசாக கொடுப்பது சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.  தற்போது பலரும் டெக் கேஜெட்டுகளை பரிசாக கொடுக்க தொடங்கிவிட்டனர்.  இவை கொஞ்சம் செலவு அதிகமாக இருந்தாலும் இந்த பரிசு பலராலும் விரும்பப்படுகிறது.  உடை, உணவு போன்றவற்றை போல கேஜெட்டுகளும் வயது, பாலினம் போன்ற வேறுபாடு இல்லாமல் பலரும் இதனை விரும்புகின்றனர்.  கேட்ஜெட்டுகள் தனி நபருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.  கேட்ஜெட்டுகள் பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது, அந்த கேட்ஜெட்டுகளில் சிறப்பானவற்றை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்தமான பெண்களுக்கு நீங்கள் கொடுத்து அவர்களை மகளிர் தின நன்னாளில் மகிழ்விக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மிகக்குறைந்த EMI-ல் அசத்தலான TVS iQube மின்சார ஸ்கூட்டர்: பெட்ரோல் விலை பற்றி இனி கவலையில்லை


 


ஃபிட்னஸ் டிராக்கர் :


கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது அனைவரும் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.  அதனால் ஃபிட்னஸ் பேண்ட் அல்லது டிராக்கரை பரிசளிப்பது சிறப்பான பரிசாக அமையும்.  ஓய்வில்லாமல் ஓடி உழைக்கும் பெண்களின் உடல்நலத்தை கண்காணிக்கும் பொருட்டு இது அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.  இந்த பரிசை நீங்கள் அவர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் ஆரோக்கியத்தின் மேல் உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்ற எண்ணம் அவர்களுக்குள் உருவாகும்.



ரூம் ஹியூமிடிஃபையர் :


பொதுவாகவே பெண்கள் தங்கள் சருமத்தை அழகாக பாத்துக்க நினைப்பார்கள், சரும அழகில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.  முகத்தை பராமரிக்க பலரும் சில ஸ்கின் சேர் முறைகளை பின்பற்றி வருகின்றனர்.  இந்த ஹியூமிடிஃபையர் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்கி சருமத்திற்கு ஊட்டமளிக்க உதவுகிறது.  இவை விலை குறைவாகவும், அதே சமயம் பயனுள்ளதாகவும் இருக்கிறது.


ஃபோட்டோ ஃபிரேம்கள் :


ஃபோட்டோ பிரேம்களை பரிசளிப்பது பெண்களுக்கு பிடித்ததாக இருக்கிறது. போட்டோக்கள் பொதுவாக அழகிய தருணங்களை நினைவுபடுத்துபவை, டிஜிட்டல் வீடியோ பிரேமை பரிசளிப்பது அவர்களுக்கு பிடித்தமானதாக இருப்பதுடன், அதனை பெண்கள் அவர்களது அறைகள் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் வைத்து சில அழகிய நினைவுகளை நினைத்து மகிழ்ச்சி அடைவார்கள்.


ஜிபிஎஸ் டிராக்கர்/டைல் டிராக்கர் :


நாம் வாழும் இந்த பரபரப்பு நிறைந்த சூழலில் ஒரு பொருளை எங்கே வைத்தோம்  என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோம் , அதிலும் பெண்கள் எல்லா வேலையையும் தானே செய்வதால் அவர்களுக்கு அதிக நியாபக மறதி ஏற்படுகிறது.  பெண்கள் பொருட்களை தவறவிடாமல் இருக்க, ஜிபிஎஸ் டிராக்கரை பரிசளிப்பது மிகவும் பொருத்தமானதாக கருதப்படுகிறது.



ஹேர் ட்ரையர் :


பெரும்பாலான பெண்களுக்கு, ஹேர் ட்ரையர் என்பது அத்தியாவசியமான ஒன்று.  நீங்கள் பரிசளிக்க விரும்பும் பெண்ணிடம் இந்த பொருள் உள்ளதா என்பதை முதலில் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள், அதன் பிறகே இதனை அவர்களுக்கு நீங்கள் வாங்கி கொடுக்கலாம்.  நீங்கள் வாங்கி கொடுக்கும் ஹேர் ட்ரையரை  தரமானதாக வாங்கி கொடுங்கள்.


மேலும் படிக்க | பாதி விலையை விட குறைவாக கிடைக்கிறது iPhone 11: அமேசானில் அதிரடி விற்பனை


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR