பில் கேட்ஸ், பராக் ஒபாமா, எலான் மஸ்க், எலான் மஸ்க் போன்ற பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து, இந்த செயல் தங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறிய டிவிட்டர் மன்னிப்பு கோரியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த செயல் தங்களுக்கு  ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் டிவிட்டர் கூறியது.


ALSO READ | வீடியோவில் விசிட் ..வாட்ஸ் அப்பில் டீல்…. கைக்கு வந்தது தீவு…!!!


வியாழக்கிழமை அன்று, Barack Obama, Bill Gates, Elon Musk, Joe Biden உள்ளிட்ட அமெரிக்க பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு க்ரிப்டோ கரன்ஸி, பிட் காயின் போன்றவை தொடர்பான மோசடிப் பதிவுகள் அவர்களின் ட்விட்டர் பக்கங்களில் பகிரப்பட்டன. க்ரிப்டோ கரன்ஸிக்கு நன்கொடை அளிக்குமாறு கோரி பதிவுகள் போடப்பட்டன.


சுமார் 130 பயனர்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது என்றும், இதில் 45 ட்விட்டர் கணக்குகளில், பாஸ்வேர்ட் ரீசெட் செய்யப்பட்டு, லாக் இன் செய்து ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டன என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.


அமெரிக்க பில்லியனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு, அவர்களது கணக்குகளில் பதியப்பட்ட ட்வீட்டுகள் காரணமாக சில நிமிடங்களில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நன்கொடைகள் வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இவர்களின் டிவிட்டர் கணக்குகளை  லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர்.


ALSO READ | வீடு தேடி வரும் மருத்துவமனை…. கொரோனாவிற்கு ஆப்பு வைக்கும் IIT …!!!


இந்த மோசடி  குறித்து ட்விட்டர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க செனட் குழு உத்தரவிட்டது.


மேலும், இது போல செயல்கள்  இனி நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தங்கள் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Twitter தெரிவித்தது. விசாரணை தொடர்வதாகக் கூறியுள்ளது.


" சில பயனர்களின் ட்விட்டர் கணக்குகளில் தோன்றும், எங்கள் Internal Support Tool  மூலம்  மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை ஹாக்கர்களால் பெற  முடிந்தது" என்று ட்விட்டர் கூறியுள்ளது.


“பாதிப்புக்குள்ளான ட்விட்டர் பயனர்களுடன்  நேரடியாக தொடர்புகொள்வதில் நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்” எனவும் ட்விட்டர் கூறியுள்ளது.


லாக் செய்யப்பட்டுள்ள அனைத்து ட்விட்டர் கணக்குகளையும் விரைவில் மீட்டெடுத்து பயனர்களுக்கு வழங்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.