மைக்ரோ பிளாகிங் சமூக வலைதளமான ட்விட்டர் இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் கொடிக்கெட்டி பறக்கிறது. உள்ளூர் நாயகர்கள் முதல் உலக நாயகர்கள் வரை ட்விட்டரை பயன்படுத்துவதால் அதன் தாக்கமும், வீச்சும் அதிகமாக காணப்படுகிறது. தற்போதெல்லாம், பல்வேறு சமூக மாற்றங்களுக்கு ட்விட்டரும் பெரும் பங்கை வகிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோ, போட்டோ உள்பட தங்களது கருத்துகளை எளிமையாக கொண்டு சேர்க்கவும், தங்களுக்கு கிடைத்த தகவல்களை மற்றவர்களிடம் அனுப்பவும் ட்விட்டர் பயன்படுகிறது. ட்விட்டர் தங்களின் பயனர்களுக்கு புளூ டிக் கொடுத்து அங்கீரிப்பதன் மூலம் பொய்யான தகவல்களும், ஆதாரமற்ற தகவல்களும் அதில் பரவுவது ஓரளவு தடுக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | வாட்ஸ்சப்பில் இப்படியெல்லாம் மோசடி நடக்கிறதா? உசார் மக்களே!


ஒரு ட்வீட்டை பதிவிட்டால், அதை முன்பெல்லாம் மாற்ற இயலாது. ஆனால், தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தங்களால் அங்கீகரிக்கப்பட்ட பயனர்களால் ட்வீட்டை பதிவிட்ட பின்னரும் எடிட் செய்ய முடியும். இதை விரைவில் உலகெங்கிலும் கொண்டுவர ட்விட்டர் நிறுவனம் முயன்று வருகிறது. 


ட்விட்டர் நிறுவனத்தை பெரும் கோடீஸ்வரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் வாங்க உள்ளார். இதில், சிறு பிரச்சனைகள் ஏற்பட்டபோதும், பிறகு இருதரப்பும் சமாதனமாகி ட்விட்டர் விற்பனை தற்போது உறுதியாகியுள்ளது. மேலும், ட்விட்டரில் பல பொய் கணக்குகள் இருப்பதாகவும், அதனால் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும் எலான் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 


இதனிடையே, பொய்யான கணக்குகள் குறித்த தரவுகளை ட்விட்டர் தனக்கு அளிக்கவில்லை என எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியிருந்தார். தற்போது, இந்த விஷயம் அவர்களுக்குள் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மற்றொரு அப்டேட் ஒன்றையும் விரைவில் ட்விட் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


ட்வீட்டை தற்போது யார் வேண்டுமானாலும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியும். மற்றவர்களுக்கு அந்த ட்வீட்டை பகிர ஸ்கிரீன்ஷாட் உதவியாக இருக்கும். ஆனால், இதை ட்விட்டர் நிறுவனம் விரும்பவில்லை. ட்வீட்டை மற்றவர்களுக்கு பகிர விரும்பினால், அதை அவருக்கு ட்விட்டரில் இருந்தே பகிர வேண்டும் என ட்விட்டர் விரும்புகிறது.


இதற்காக, ட்விட்டர் பயனாளிகள் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முற்பட்டால், அவர்களுக்கு பாப்-அப் மெசேஜை ட்விட்டர் அனுப்புகிறது. அதில், ட்விட்டரில் இருந்த பகிரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. விரைவில், ட்வீட்டை ஷேர் செய்ய பிரத்யேக பட்டனை அந்நிறுவனம் கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில், வாட்ஸ்அப் தனது வியூ-ஒன்ஸ் வசதியில் அனுப்பப்படும் புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாதபடி அப்டேட் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 'ஜாக்கிரதை' கூகுள் க்ரோம் குறித்து அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ