டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றும்படி மக்களுக்கு டுவிட்டர் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது!   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டர் நிறுவனம் தங்கள் அதிகாரபூர்வ பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் ட்விட்டர் நிறுவனத்தில் சில தொழில்நுட்பக் கோளாறு கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும், பின் அது சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.


இதில், பயனாளர்களின் பாஸ்வேர்ட் திருட்டு  மற்றும் தனிப்பட்ட விவரங்கள் தவறாக கையாளப்படுதல் போன்றவை எதுவும் நடக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயனாளர்கள் தங்கள் கணக்குக்கான கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளுமாறு 33 கோடி பயனாளர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.


தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ள டுவிட்டர் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று உறுதியளித்துள்ளது. 


சமீபத்தில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் கருத்துத் தெரிவிப்பவர்களின் கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் முடக்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை 2,74,460 கணக்குகளை டிவிட்டர் முடக்கியுள்ளது. முந்தைய புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 8.4 சதவீதமாக குறைந்துள்ளது.


டிவிட்டர் வெளியிட்ட விவரத்தில் 2015 ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் 2017 இடையே சுமார் 1,210,357 கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் முடக்கி வைத்துள்ளது. இந்நிலையில் வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துக்களை வெளிட்டதால் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..!