EV: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ செல்லும் பைக்! விரைவில்
ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் செல்லும் மின்சார பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பெங்களூரில் செயல்பட்டு வரும் EV ஸ்டார்ட்அப் Ultraviolette நிறுவனம், எலக்ட்ரிக் ஸ்போர்ட்பைக் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளது. 2019 ஆம் ஆண்டு F77 ஸ்போர்ட்ஸ் பைக்கை தயாரித்து வருவதாக தெரிவித்த நிறுவனம், அப்போது ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணிக்க முடியும் எனக் கூறியிருந்தது.
இந்நிலையில், லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள தகவலில், இந்த பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணிக்க முடியும் என கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பேட்டரியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதால், இது சாத்தியமானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இந்த பைக் பற்றிய தகவலைக் கூறிய பிறகு, அதில் நிறைய மாற்றங்களை செய்துள்ளது. பேட்டரி குறையும்போது, அந்த தகவலை வண்டி ஓட்டுநருக்கு சிக்னல் மூலம் தெரிவிக்கும் வகையிலும், ரைடருக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை கூடுதலாக சேர்த்துள்ளது
பேட்டரி மற்றும் வண்டியில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்டிரானிக்ஸ் பொருட்களை விரைவில் சேதமடையாத வகையில் பாதுகாப்புடன் இருக்குமாறு வண்டி வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள Ultraviolette நிறுவனம், டச்ஸ்கிரீன் இல்லாத டிஜிட்டல் கிளஸ்டர் பைக்கில் இடம்பெற்றிருப்பதாக கூறியுள்ளது. மேலும், பைக்கின் வேகத்தைப் பொறுத்து முன்பக்கத்தில் இருக்கும் டிஸ்பிளே நிறம் மாறும் அம்சமும் கொடுக்கப்பட்டிருப்பதாக அல்ட்ராவைலட் தெரிவித்துள்ளது. ஒரே இரவில் சார்ஜ் ஆகும் இந்த பைக், அதிகபட்சம் ரூ. 2.50 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR