நீங்கள் ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? உங்கள் பட்ஜெட் குறைவாக உள்ளதா? அப்படி என்றால், இந்த செய்தி உங்களுக்கு உபயோகமாக இருக்கும். அமேசானில் தற்போது ஸ்மார்ட் டிவி-களுக்கு ஒரு அற்புதமான சலுகை உள்ளது. இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் ரு. 56,000 மதிப்பிலான ஸ்மார்ட் டிவி-ஐ வெறும் ரூ. 32,000-க்கு வாங்கிச்செல்லலாம். அமேசான், தனது அமேசான்பேசிக்ஸ் ஸ்மார்ட் டிவி-இல் (AmazonBasics Smart TV) இந்த தள்ளுபடியை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த டீல் AmazonBasics ஸ்மார்ட் டிவியில் கிடைக்கும்


50 இன்ச் அமேசான் பேசிக்ஸ் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.56,000 ஆகும். ஆனால் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுக்கு பிறகு இதன் விலை அமேசானில் ரூ.32,000 ஆக குறைந்துள்ளது. வாடிக்கையாளர்ககள் 32 அங்குல வர்சனை வாங்க விரும்பினால், அதற்கு வெறும் ரூ.12,499-ஐ செலுத்தினால் போதும். 


இதன் சிறப்பம்சங்கள் என்ன?


இந்த AmazonBasics Smart LED TV ஆனது ஆண்டி-அலியேசிங் டைனமிக் காண்டிராஸ்ட் (Anti-aliasing Dynamic Contrast) உடன் பேக்லைட்டுடன் கிடைக்கிறது. மேலும் இது இரைச்சலைக் குறைப்பதோடு, அதிவேக காட்சி அனுபவத்தை (இமர்சிவ் விசுவல் எக்ஸ்பீரியன்ஸ்) வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி-யில், A+ கிரேட் LED பேனலுடன் பிரகாசமான காட்சி (டிஸ்பிளே) மற்றும் சிறந்த காண்டிராஸ்டையும் வாடிக்கையாகர்கள் அனுபவிக்கலாம். 


மேலும் படிக்க | யுபிஐ செயலியில் ஆட்டோமேடிக் பேமெண்ட் செட் செய்வது எப்படி? 



இது ஒரு ஸ்மார்ட் டிவி என்பதால், இது பேரண்டல் லாக் மற்றும் கிட்ஸ் மோட்ஸுடன் கிடைக்கிறது.  மேலும் பயனர்கள் டிவி பார்க்கும்போது நினைவூட்டல்கள் மற்றும் டைமர்களை செட் செய்ய  அலெக்ஸாவைப் பயன்படுத்தலாம். இதில் உள்ள டிடிஎஸ் ட்ரூ சரவுண்ட் சவுண்ட் அதிவேக ஒலி அனுபவத்தை வழங்குகிறது.


இந்த வகையில் பல வித நவீன மற்றும் சமீபத்திய புதுப்பித்தல்களைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் டிவி மிக மலிவான விலையில் கிடைக்கின்றது. இதன் அம்சங்களை ஒப்பிட்டு பார்த்தால், இதன் விலை மிகக்குறைவாகும். சில ஸ்மாட்போன்களுக்கு நாம் செலவழிக்கும் தொகையை விட குறைவான விலையில் நாம் இந்த ஸ்மார்ட் டீவி-ஐ வாங்கலாம். 


மேலும் படிக்க | ஆன்லைன் ரிவ்யூக்களுக்கு செக் வைத்த அரசு! இனி இஷ்டத்துக்கு போட முடியாது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ