Samsung Smartphone Offer: புத்தாண்டில், சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போன் தொடரைக் கொண்டுவரப் போகிறது. இதற்கு முன்னால், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, நிறுவனம் அதன் பழைய சீரிஸ் போன்களின் விலையைக் குறைத்தது. அந்த விலை குறைப்பு பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Samsung Galaxy S20 FE 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ. 35,000 குறைக்கப்பட்டுள்ளது.


இந்த போனின் அம்சங்கள்: 


இந்த சாம்சங் (Samsung) போன் 5G இணைப்புடன் கூடிய இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் கூகுளின் ஆண்ட்ராய்டு 11ல் வேலை செய்கிறது. குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 ஆக்டா கோர் செயலி போனில் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள் ஸ்டோரேஜ் உள்ளது. மெமரி கார்டு மூலம் 1TB வரை இதை விரிவாக்க முடியும்.


Samsung Galaxy S20 FE 5G அம்சங்கள்:


Galaxy S20 FE-யில், 6.5 இன்ச் O Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இதன் புதுப்பிப்பு விகிதம் 120Hz ஆகும். டிஸ்பிளேவின் ரெசல்யூஷன் 1080 x 2400 பிக்சல்கள் ஆகும். 


ALSO READ | இவையே 2021 இன் டாப் 5 Smartphones, எது பெஸ்ட் 


கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 12 மெகாபிக்சல்கள் கொண்ட இரண்டு கேமராக்கள் மற்றும் 8 மெகாபிக்சல்கள் கொண்ட ஒரு கேமரா உள்ளது. அதன் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் பஞ்ச் ஹோல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 


இந்த ஸ்மார்ட்போனுக்ககு (Smartphone) பவர் கொடுக்க 4500எம்ஏஎச் பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி அதிவேக சார்ஜிங், வேகமான வயர்லெஸ் சார்ஜிங் உடன் வருகிறது. பாதுகாப்பிற்காக கைரேகை ஸ்கேனரும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது.


விலை மற்றும் சலுகைகள்


அமேசானில் (Amazon) இந்த போனின் விலை ரூ.39,990 ஆகும். இந்த போனில் ரூ.14900 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. அதாவது பழைய போனை கொடுத்து இந்த போனை வாங்கினால் பழைய போனின் விலையாக ரூ.14900 வரை கிடைக்கும். மேலும் பாங்க் ஆப் பரோடாவின் கிரெடிட் கார்டில் வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த போனை மாதம் ரூ.1882 தவணையில் வாங்கும் சலுகையும் உள்ளது.


ALSO READ | Flipkart சலுகை: 20 ஆயிரம் வரை தள்ளுபடி; Realme வாங்க சரியான நேரம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR