வீடியோ: ’ட்விட்டர்’ பயன்படுத்துவது எப்படி?
இணையம், மனித வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது!
விழித்து எழுந்ததும் நாம் பார்பது கைபேசியின் முகத்தைத் தான் என்றால் யாராலும் மறுக்க இயலாது. அப்படி நாம் கைபேசியுடன் ஒட்டி உறவாட என்ன இருக்கின்றது?
வேறு என்ன இணையம் தான், உலகத்தையோ நம் கையில் கொன்டு வந்துவிடுகிறது அல்லவா... இச்செயலில் முக்கிய பங்காற்றுவது சமுக வலைதளங்கள் தான்.
நாம் தினமும் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தினாலும், அவற்றை முழுமையாக நமக்கு பயன்படுத்த தெரிவதில்லை. நமக்கு ஒரு விசயம் தெரியாவிடில் நாம் யாரிடம் கேட்பது?
இந்த பிரச்சனைகளில் இருந்து தங்களது வாடிக்கையாளர்களை காக்க பிரபல பதிவு தளம் ட்விட்டர் சேவை ஒன்றினை வழங்கி வருகின்றது. வாடிக்கையாள் நேரடியாக சேதிகள் அனுப்பி தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
எவ்வாறு?., இதுகுறித்த வீடியோ ஒன்றினை ட்விட்டர் வெளியிட்டுள்ளது!