Vivo Y73: பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ (Vivo) சமீபத்தில் தனது புதிய மிட்-ரேஞ் தொலைபேசியான Vivo Y73-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த தொலைபேசியை மிகக் குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் படி, இந்த தொலைபேசியை குறைந்த விலையில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். Vivo Y73 ஸ்மார்ட்போனின் விலை ரூ .20,990 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இந்த தொலைபேசியை ஆயிரம் ரூபாய் குறைவாக ஆர்டர் செய்யலாம்.


பிளிப்கார்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, நீங்கள் எச்.டி.எஃப்.சி அல்லது கோட்டக் கிரெடிட் கார்ட் கொண்டு Vivo Y73-க்கு பணம் செலுத்தினால், உடனடியாக ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். தொலைபேசியின் விவரக்குறிப்புகளை இங்கே காணலாம். 


Vivo Y73-இன் விவரக்குறிப்புகள்


Vivo Y73 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே உள்ளது. இது 1,080 × 2,400 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. அண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 11.1-இல் இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) தொலைபேசி செயல்படுகிறது. இந்த தொலைபேசியில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் 1 டிபி வரை விரிவாக்கலாம்.


கேமரா மற்றும் பேட்டரி


Vivo Y73-ல் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. தொலைபேசியில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. 


ALSO READ: Vivo V21e: அசத்தலான அம்சங்களுடன் Vivo V21e ஸ்மார்ட்போன் அறிமுகம் 


இணைப்பு வசதிகளுக்கு, 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் வி 5, 3.5 எம்.எம். ஹெட்ஃபோன் ஜேக் மற்றும் சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளன. ஆன்-போர்டு சென்சார்களில் ஆக்சிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஈ-காம்பஸ் மற்றும் கைரோஸ்கோப் ஆகியவை உள்ளன. இந்த தொலைபேசியில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரும் உள்ளது.


Redmi Note 10 Pro-வுடன் சந்தையில் போட்டி


Vivo Y73 ஸ்மார்ட்போன் சந்தையில், ரெட்மி நோட் 10 ப்ரோவுடன் போட்டியிடுகிறது. Redmi Note 10 Pro 6.67 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது MIUI 12 அடிப்படையிலான Android 11 இயக்க முறைமையில் இயங்குகிறது. செயல்திறனுக்கு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி செயலி அதில் கொடுக்கப்பட்டுள்ளது. 


இந்த தொலைபேசி 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் 512 ஜிபி வரை விரிவாக்க முடியும். இது ஒரு குவாட் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. இதன் முதன்மை கேமரா 64 மெகாபிக்சல்கள் திறன் கொண்டது. பவரைப் பொறுத்தவரை, இந்த தொலைபேசியில் 5020mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 33W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது.


ALSO READ:Vivo V21 5G: உலகின் முதல் 44MP OIS செல்ஃபி காமரா போனில் பம்பர் தள்ளுபடி, முந்துங்கள்!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR