தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாஃபோன் ஐடியா நிறுவனம், குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான காஷ்பேக் ஆஃபரை வழங்கியுள்ளது. இந்த காஷ்பேக் ஆஃபரை ஒருமுறை மட்டுமல்ல, மாதந்தோறும் 2 ஆண்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் பெறலாம். அவ்வப்போது கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கும் வோடாஃபோன் ஐடியா நிறுவனம், இப்போது வெளியிட்டிருக்கும் இந்த புதிய ஆஃபர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வோடாஃபோன் ஐடியா ஆஃபர்


வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளராக இருந்து, 2ஜி நெட்வொர்க்கில் இருந்து 4ஜிக்கு மாறியிருந்தால் உங்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள அதே சலுகையை வோடாஃபோன் ஐடியாவும் அறிவித்துள்ளது. 2ஜி நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை 4 ஜி நெட்வொர்க்குக்கு இழுக்கும் நோக்குடன் இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அமேசானில் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.2000-க்கும் குறைவான விலையில்


மாதந்தோறும் காஷ்பேக் ஆஃபர்


இவ்வளவு நாட்கள் நீங்கள் 2 ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்தி, இப்போது 4ஜி நெட்வொர்க்குக்கு மாறியிருந்தால், ரூ.299 மற்றும் அதற்கு மேலான ப்ரீப்பெய்ட் திட்டங்களை ரீச்சார்ஜ் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு மாதம் 100 ரூபாய் காஷ்பேக் ஆஃபர் கிடைக்கும். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்கும் என்பதால், 2400 ரூபாய் வரை காஷ்பேக் ஆஃபரை நீங்கள் பெறுவீர்கள். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கும் ரூ.299 க்கு மேலான ப்ரீப்பெய்ட் திட்டங்களை நீங்கள் ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் உங்களுக்கு தொடர்ந்து காஷ்பேக் ஆஃபர் கிடைக்கும். 


நினைவில் கொள்ளுங்கள்


இந்த ஆஃபர் கிடைக்க வேண்டும் என்றால் உங்கள் மொபைலில் வோடாஃபோன் ஐடியா செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் 299 ரூபாய் மற்றும் அதற்கு மேலான ப்ரீப்பெய்ட் திட்டங்களை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒருமுறை மட்டுமே உங்களுக்கான காஷ்பேக் ஆஃபர் கிடைக்கும். மேலும், கிடைக்கும் காஷ்பேக் ஆஃபர் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். 


மேலும் படிக்க |ஆண்ட்ராய்டு 12 ஸ்மார்ட்போன்களும், அவற்றை பாதிக்கும் டர்ட்டி பைப்பும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR