இப்போது ஸமார்ட்போன் யூசர்கள் ஓடிடி சேவைகளையும் சேர்த்து ரீச்சார்ஜ் செய்வது தான் டிரெண்டிங். அவரவர்களுக்கு பிடித்த ஓடிடி சேவைகளை மொபைல் ரீச்சார்ஜூடன் வாடிக்கையாளர்கள் ரீச்சார்ஜ் செய்து கொள்கிறார்கள். வோடாஃபோன் ஐடியா, ஜியோ, ஏர்டெல் ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் பல்வேறு ப்ரீப்பெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிளான்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், சோனி லைவ் உள்ளிட்ட ஓடிடி சந்தாக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், Vodafone-Idea (Vi) நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு போஸ்ட்பெய்ட் சேவைகளின் பலனை வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் Amazon Prime, Disney + Hotstar மற்றும் SonyLIV ஆகிய ஓடிடிக்களை ஒரே ரீச்சார்ஜில் பார்க்க வேண்டும் என்றால் அதற்கான பிளான் வோடாஃபோன் ஐடியா நிறுவனத்திடம் இருக்கிறது. ரூ.701 இருந்தால் போதும். இதற்கு வரியுடன் சேர்த்து சுமார் 900 ரூபாய் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் கிடைக்கும் பலன்களின் பட்டியலில் வரம்பற்ற டேட்டாவும் உள்ளது. FUP வரம்பு பொருந்தாது.


மேலும் படிக்க | Youtube: யூடியூபில் லட்ச லட்சமாக பணம் சம்பாதிப்பது எப்படி? ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!


Vi இன் போஸ்ட்பெய்ட் ரூ.701 திட்டம்


ரூ.701 விலையில் Vodafone-Idea (Vi) போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தால், அனைத்து பயனர்களும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பின் பலனைப் பெறுவார்கள். இது தவிர, ஒவ்வொரு மாதமும் 3000 எஸ்எம்எஸ் அனுப்பும் விருப்பமும் உள்ளது. பயனர்கள் வரம்பற்ற அதிவேகத் தரவையும் பெறுகிறார்கள். மேலும் FUP வரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை என்பதால், இந்தத் டேட்டா தீர்ந்துவிடும் என்ற பிரச்சினை யூசர்களுக்கு இல்லை.


எந்தெந்த ஓடிடிக்கள் பார்க்கலாம்?


701 விலையில் Vi's திட்டத்தில் பல பொழுதுபோக்கு நன்மைகளும் வழங்கப்படுகின்றன. பல OTT சேவைகளைத் தவிர, பயனர்கள் ஹங்காமா மியூசிக் மூலம் விளம்பரமில்லா இசையைக் கேட்கலாம். இது தவிர, Vi Movies & TV தவிர, Vi Gamesன் பலனையும் பெறுவீர்கள். திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பேசுகையில், OTT முதல் ஆன்டி வைரஸ் பாதுகாப்பு அம்சமும் இதில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 6 மாதங்களுக்கு Amazon Prime சந்தா, 1 வருடத்திற்கு Disney + Hotstar Mobile, 1 வருடத்திற்கு SonyLIV மற்றும் 1 வருடத்திற்கு SunNXT சந்தா வழங்கப்படுகிறது. மேலும், Swiggy One, EazyDiner மற்றும் EaseMyTrip ஆகியவற்றுக்கான அணுகல் 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது. நார்டன் மொபைல் பாதுகாப்பு கவரும் 1 வருடத்திற்குக் கிடைக்கும்.


மேலும் படிக்க | Investment Schemes for Women: பெண்கள் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ