24 மணி நேரத்தில் பாஸ்போர்ட் டெலிவரி: கலக்கும் பாஸ்போர்ட் மையம்.
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
பெற்றோர் தன் மகனுக்கு பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் சிறுவனின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் முகவரி சான்றிதழுடன் பெற்றோரின் பாஸ்போர்ட் நகலை பதிவேற்றம் செய்தனர். பாஸ்போர்ட் சேவை மையத்தில் நேர்காணலுக்காக நேரம் காலை 10 மணிக்கு நேர்காணலுக்காக நேரம் கிடைத்தது. சிறுவனும், பெற்றோரும் சரியான நேரத்திருக்கு பாஸ்போர்ட் சேவை மையத்துக்குள் நுழைந்தனர். அதிகாரிகளுடன் நேர்காணல், ஆவணங்கள் சரிபார்த்தல், புகைப்படம் எடுத்தல், சிறுவனின் கைரேகை பதிவு, செல்போன் பதிவு செய்தல் என அடுத்தடுத்த நடைமுறைகள் 30 நிமிடத்தில் முடிவடையந்து. அடுத்த ஓறிரு நிமிடங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த பெற்றோரின் செல்போனில் ஒரு குறுந்தகவல் வந்தது "பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வருகை தந்தமைக்காக நன்றி’ என்று. மீண்டும் அரை மணி நேரம் கழித்து குறுந்தகவல் வந்தது "காவல் துறை விசாரணை தேவையில்லை என்ற அடிப்படையில் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்று. மீண்டும் அரை மணி நேரம் கழித்து குறுந்தகவல் வந்தது பாஸ்போர்ட் அச்சிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று. மதியம் மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்தது "பாஸ்போர்ட் அச்சிடும் பணி முடிந்துவிட்டது" என்று, அடுத்து மாலையில் செல்போனில் ஒரு குறுந்தகவல் வந்தது "விரைவு தபால் சேவை மூலம் உங்கள் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டு விட்டது" எனவும், அடுத்துநாள் காலை சுமார் 10 மணிக்கு பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது.
விண்ணப்பித்த 24 மணி நேரத் தில் வீட்டிலேயே பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்டது எப்படி என்று பாஸ்போர்ட் அதிகாரி கேட்டபோது அசல் ஆவணங்கள் எனப்படும் இருப்பிடச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் எவ்வித வில்லங்கமும் இல்லாமல் சரியாக இருந்தால் பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு அழைக்கப்படும் அதே நாளில் அவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். காவல் துறை விசாரணை தேவையில்லாத விண்ணப்பங்களுக்கு அன்றைய தினமே பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு அடுத்த நாளோ அதற்கு மறுநாளோ பாஸ்போர்ட் கிடைத்துவிடும். காவல் துறை விசாரணை தேவை என்றால் பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்கப்படும் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர் பற்றிய தகவல்கள் ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டு மேலும் அங்கிருந்து காவல் நிலையத்துக்கு தகவல்கள் அனுப்பப்பட்டும் அவர்கள் விண்ணப்பதாரரின் இருப்பிடத்துக்கு சென்று விசாரணை செய்து அறிக்கை அனுப்புவார்கள். அதிக பட்சம் 21 நாட்களாகும். அறிக்கை கிடைத்தவுடன் விண்ணப்பதாரருக்கு ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்டும்.
பாஸ்போர்ட் பெற்றவர்கள் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். பிறகு புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து எஃப்.ஐ.ஆர். நகல் பெற வேண்டும். அவர்கள் Non Traceable சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.