IPL: பிளே ஆஃப்-ஐ ஒரு ரூபாய்கூட செலவில்லாமல் இலவசமாக பாருங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகளை ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இலவசமாக பார்க்க உங்களுக்கான டிப்ஸ்.
ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியாமல் சில கிரிக்கெட் ரசிகர்கள் குறுக்கு வழிகளை தேடிக் கொண்டிருக்கின்றனர். இப்போது நீங்கள் உங்கள் மொபைலில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க வேண்டும் என்றால், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை ரீச்சார்ஜ் செய்தால் மட்டுமே பார்க்க முடியும். ஆனால், அதற்கு ரீச்சார்ஜ் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | இந்திய குழந்தைகள் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆபத்து
இது எங்களுக்கு தெரியுமே என்று அவசரப்படாதீர்கள். நீங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை ஒரு ரூபாய்கூட செலவு செய்யாமல் இலவசமாக பார்க்கும் வாய்ப்பும் இருக்கிறது. அந்த டிப்ஸைத் தான் உங்களுக்கு நாங்கள் சொல்ல இருக்கிறோம். மொபைலில் ரீச்சார்ஜூடன் சில பிளான்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இலவசமாக கொடுக்கப்படுகிறது. அனைப் போலவே ஒரு திட்டம் இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் ஒரு அருமையான திட்டத்தைக் கொடுக்கிறது.
இந்த திட்டத்தை நீங்கள் ரீச்சார்ஜ் செய்தால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை இலவசமாக பார்க்கலாம். அதாவது, Airtel Xstream Fiber கனெக்ஷனை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினீர்கள் என்றால், 699 ரூபாய்க்கு கொடுக்கப்படும் பிளானை தேர்ந்தெடுங்கள். இந்த பிளானில் 40Mbps வேகத்தில் இணையம் உட்பட பல அற்புதமான பலன்கள் கிடைக்கும். மேலும், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவையும் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | அசத்தலான அம்சங்களுடன் Vivo X80 ஸ்மார்ட்போன் அறிமுகம்
இதேபோல், ஏர்டெல்லின் 1099 திட்டத்திலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை பார்க்கலாம். இந்தப் பிளானில் உங்களுக்கு 200Mbps இணைய வேகம் கிடைக்கும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டத்தில் இருக்கும் 1,599 ரூபாயை தேர்ந்தெடுத்தால் டிஸ்னி + ஹாட்ஸ்டாரை தொலைக்காட்சியில் நண்பர்களுடன் அமர்ந்து ஜாலியாக பார்க்கலாம். 300Mbps வேகத்தில் இணைய வேகம் இருக்கும். இதனைவிடவும் அதிவேக இணையம் உங்களுக்கு வேண்டுமானால் 3,999 திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR