ஐபிஎல் 2022: ஐபிஎல் 2022 இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதன் காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஐபிஎல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி இயங்குதளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும். ஆகையால் பல பயனர்கள் இந்த தளத்தில் உறுப்பினர் ஆக விரும்புகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்கள் தளங்களில் தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் சிறப்பு சந்தாக்களையும் தளத்தில் இணைக்கின்றனர். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா (Vi) ஆகியவற்றில் உள்ள திட்டங்களுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. நீங்களும் இலவசமாக ஐபிஎல் பார்க்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களை ஆராய்ந்து உடனடியாக ரீசார்ஜ் செய்யலாம். 


ரிலையன்ஸ் ஜியோவின் டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டங்கள்


ரிலையன்ஸ் ஜியோ-வின் முதல் திட்டம் ரூ.601க்கு 28 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளும் கிடைக்கும். ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 6 ஜிபி டேட்டாவையும் இந்த திட்டம் வழங்குகிறது. 


ஜியோ ரூ.499க்கான ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100எஸ்எம்எஸ்/தினமும் ஆகிய நன்மைகளும் கிடைக்கின்றன. ஜியோ குறிப்பிட்டுள்ள இரண்டு திட்டங்களும் ஒரு வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் அணுகலுடன் வருகின்றன. இதன் விலை ரூ.499 ஆகும்.


ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்ற பல்வேறு ஜியோ பயன்பாடுகளை பயனர்கள் அனுபவிக்க முடியும். மேலும், தினசரி டேட்டா வரம்பை பயன்படுத்திய பிறகு, பயனர்கள் 64கெபிபிஎஸ் இணைய வேகத்தையும் அனுபவிக்கலாம். 


மேலும் படிக்க | Tips and Tricks: நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை எளிதாக ரத்து செய்யும் சுலப வழிமுறைகள் 


வோடபோன் ஐடியாவின் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்கள்


மறுபுறம் வோடபோன் ஐடியா-வும் ரூ.601 திட்டத்தை வழங்குகிறது. Vi இன் ரூ.601 திட்டமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற அழைப்பையும் வழங்குகிறது. Vi இன் இந்த திட்டம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. 


Vi மேலும் ரூ.901 விலையில் ஒரு நாளைக்கு 3ஜிபி ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டம் 70 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் அளிக்கின்றது. தொகுக்கப்பட்ட ஓடிடி இயங்குதளங்களை எடுத்துக்கொண்டால், ​​டெல்கோ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுடன் ஜியோ போன்ற ஒரு வருட அணுகலையும் வழங்குகிறது. இது தவிர, பயனர்கள் முறையே ரூ.601 மற்றும் ரூ.901 திட்டங்களுடன் கூடுதலாக 16ஜிபி மற்றும் 48ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள்.


ஏர்டெல்லின் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்கள்


இந்தியாவின் மிக முக்கியமான தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் பற்றி பேசுகையில், அதன் "ட்ரூலி அன்லிமிடெட்" பேக்கின் கீழ் ரூ.599 திட்டம் வழங்கப்படுகின்றது. இது மற்ற இரண்டின் அதே நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். 


இதனுடன், பயனர்கள் தினமும் மொத்தம் 100 எஸ்எம்எஸ்களைப் பெறுகிறார்கள். இது தவிர, பயனர்கள் செல்லுபடியாகும் காலம் வரை தினமும் 3 ஜிபி இணைய டேட்டாவைப் பெறுகிறார்கள். ஏர்டெல் ரூ.838க்கு தினசரி 2ஜிபி டேட்டா திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.


மேலும் படிக்க | Jio - Vi - Airtel: ₹299 பிரீபெய்ட் திட்டத்தில் சிறந்தது எது? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR