Whatsapp மூலம் கட்டணம் செலுத்தும் அம்சத்தை சமீபத்தில்தான் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இப்போது whatsapp பயனர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. இனி whatsapp-ல் ஷாப்பிங்கும் செய்யலாம். வாட்ஸ்அப் தனது செயலியில், புதிய 'ஷாப்பிங் பொத்தானை' சேர்த்துள்ளது. இதன் மூலம், பயனர் 'வணிக பட்டியலை' எளிதாக தேட முடியும். whatsapp வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களையும் நீங்கள் இதில் பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு நாளும் 1.75 கோடி மக்கள் வாட்ஸ்அப்பின் வணிகக் கணக்கில் செய்திகளை அனுப்புகிறார்கள். ஒவ்வொரு மாதமும் 4 கோடி மக்கள் பிசினஸ் கேட்லாகை பார்க்கிறார்கள். இவர்களில் 30 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.


Whatsapp-ன் கூற்றுப்படி, நிறுவனம் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் மேம்படுத்த விரும்புகிறது. இது குறிப்பாக விடுமுறை ஷாப்பிங் பருவத்திற்கு மிகவும் பொருந்தும். ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு (Online Shopping) தேவையான உதவியை மக்கள் விரும்புகிறார்கள். நிறுவனங்களுக்கும் விற்பனைக்கு டிஜிட்டல் ஊடகம் தேவை.


பேஸ்புக்கிற்கு (Facebook) சொந்தமான நிறுவனம், whatsapp-ல் புதிய ஷாப்பிங் பொத்தானை வழங்குவதாகக் கூறியது. இது வணிக பட்டியல்களை மக்கள் எளிதாகக் கண்டறிய உதவும்.


ALSO READ: ரீசார்ஜ் செய்யும் விலையில் phone வாங்கலாம் தெரியுமா? Rs.699 only!!


நிறுவனம் வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ள இது உதவும். இது வரை மக்கள் வணிக கேட்லாக்குகளைக் காண வணிக ப்ரொஃபைலை கிளிக் செய்ய வேண்டியிருந்தது.


Whatsapp, முதல் மெசேஜ்-காலுடன் கட்டணத் வசதியையும் (whatsapp payment) தொடங்கியுள்ளது. இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் நாட்டில் கட்டணச் சேவையைத் தொடங்க whatsapp-க்கு அனுமதி கிடைத்துள்ளது.


Whatsapp-ன் படி, இந்தியாவில் அதன் கட்டண வசதி துவங்கிவிட்டது. மக்கள் whatsapp மூலம் பணம் அனுப்பலாம். இந்நிறுவனம் இப்போது இந்தியாவின் டிஜிட்டல் கட்டண மாற்றத்திற்கு பங்களிக்க முடியும்.


சில பயனர்களின் whatsapp செயலியில் ஏற்கனவே கட்டண ஆப்ஷன் உள்ளது. அது இல்லை என்றால், நீங்கள் whatsapp-ஐ புதுப்பித்து அதைப் பெறலாம். இதற்கு UPI ஐ ஆதரிக்கும் டெபிட் கார்டு இருப்பது அவசியம். வாட்ஸ்அப் பேமென்ட் ஆப்ஷனிற்குச் சென்று வங்கியைத் தேர்ந்தெடுத்து விவரங்களை உள்ளிட்டு அதை ஆக்டிவேட் செய்யலாம். 


ALSO READ: நாட்டாமை செய்கிறதா Google Pay: வழக்கு பதிவு, விசாரணைக்கு உத்தரவு!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR